உலகம்
ஜப்பானில் கரை ஒதுங்கிய உருண்டையான மர்ம பந்து இதுதான்.. உறுதி செய்த விஞ்ஞானிகள்..!

ஜப்பான் கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் கரை ஒதுங்கிய உருண்டமான பந்து ஒரு மர்ம பொருளாக கருதப்பட்ட நிலையில் தற்போது விஞ்ஞானிகள் அது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
ஜப்பானிய கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்துறை மற்றும் உள்ளூர் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்ததாகவும் கூறப்பட்டது. இதனை முதல் கட்டமாக பரிசோதனை செய்த அதிகாரிகள் இது வெடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினாலும் அந்த பகுதி மக்களின் அச்சம் தீரவில்லை.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 155 மைல் கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு கடற்கரை நகரமான ஹமாமட்சு என்ற பகுதியில் இந்த உருண்டை பந்து ஒதுங்கியது. சுமார் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ராட்சச உருண்டை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் வல்லுனர்கள் எக்ஸ்ரே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த உருண்டைக்குள் இருக்கும் பொருள் குறித்தும் ஆராய்ந்தனர்.
இதனை அடுத்து அதிகாரிகள் தற்போது இது குறித்து தகவல் தெரிவித்த போது இந்த மர்மமான உருண்டை வெறும் ஸ்கிராப் உலோகம் தான் என்றும் ஒரு காலத்தில் கப்பலை நங்கூரம் விட இந்த இதை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். வெடிக்கும் அளவுக்கு இது ஆபத்தான பொருள் அல்ல என்றும் அதனால் இதனை பார்த்து பயப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சீனா உளவு பலூன்கள் அனுப்பி வருவதை அடுத்து கடல் வழியாக இந்த பந்து உருண்டை பந்தை உளவுக்காக அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று வதந்திகள் பரவிய நிலையில் தற்போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.