இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.08.2026

- இந்தியச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமை விதிகளின்படி, காவல்துறை உள்ளிட்ட எவருக்கும் சாதாரண சூழ்நிலைகளில் ‘சோக் ஹோல்டு’ (#Choke_hold ) செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை.
- இந்தியாவில் ரோஹிங்கியா அகதிகள், வங்க மொழி பேசும் முஸ்லிம்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோரை குறிவைத்து சட்ட அமலாக்க அமைப்புகள் நடவடிக்கை எடுப்பதாகவும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு குறித்தும் ஐ.நா. இனப் பாகுபாடு ஒழிப்பு குழு கவலை தெரிவித்துள்ளது
- அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகள் ரீல்ஸாக மாறுவதை தடுக்க நேரடி ஒளிபரப்பை சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்பு செய்ய ஆலோசனை.
- நேபாள வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு! நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பியதாகவும், மேலும் 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காலியாக இUந்த உறுப்பினர் பதவிகளுக்கு ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஆர்.என்.மஞ்சுளா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சுகந்தி ஆகியோர் நியமிக்கப்பட்யடள்ளனர்.
- கடந்த 13 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், நாளை மறுநாள் சட்டமன்றத்தில் நடைபெற உள்ள போக்குவரத்து மானிய கோரிக்கையின்போது, முதலமைச்சர் விஜய் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி அறிவிக்காவிட்டால் ஸ்டிரைக் நடத்துவோம் என்றும் ஆட்டோ-டாக்ஸி தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
- டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் லட்கி யோஜனா திட்டத்தை முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்.
- மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் செபடம்பர் 1ம் தேதி தண்ணிர் திறந்து விட முதல்வர் விஜய் வருகிறார்.












