இந்தியா
பராசக்தியா? … ஜனநாயகனா?… – சபாஷ்! சரியான போட்டி!!!

தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படம் என்று சொல்லப்படுகிற “ஜனநாயகன்“ திரைப்படம் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் “பராசக்தி“ திரைப்படம் ஜனவரி 14 ம் தேதி வெளியாக விருந்ததை முன்கூட்டியே ஜனவரி 10ம் தேதி வெளியிடப்படும்எனெ அந்த படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இப்போது “ஜனநாயகன்“ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 28ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.
அதேபோல் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் கமலஹாசன் மற்றம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த விழாவின் ஒளிபரப்பு உரிமையை வேறு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா ஜனவரி 4ம் தேதி மதியம் 3 மணிக்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம். அதே நாளில் அதே நேரத்தில் பராசக்தி திரைப்பட இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்ப அதன் உரிமையை பெற்றிருக்கும் தொலைக்காட்சி நிறுவனமும் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வந்து பரபரப்ரப ஏற்றி வருகின்றன.
இதற்காக முந்தைய நாள் இசை செளியீட்டு விழா முடிந்ததும் வேக வேகமாக எடிட் செய்யப்பட உள்ளதாகவும் அணைத்து பணிகளும் முடிவுற்று மறுநாளே ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
இந்த பொங்கல் திருநாளன்று ரசிகர்களுக்கு இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் மோதிக்கொள்ள இருக்கின்ற அதே வேளையில் அதற்கு முன்னதாக இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சி ஒளிபரப்பும் மோதிக்கொள்ள உள்ள நிலையில் கோலிவுட் திரை உலகமே ஒரு இனம் புரியாத பரபரப்பிலும் பதட்டத்திலும் இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த போட்டியில் திரையரங்குகளை போட்டி போட்டுக் கொண்டு இரண்டு வெளியீட்டு நிறுவனங்களும் புக்கிங் செய்து வருகின்றன. இதில் ஜனநாயகனுக்கு ஒரு சக்தி வாய்ந்த அரசியல் கட்சியும் பரசக்திக்கு இன்னொரு சக்தி வாய்ந்த அரசியல் கட்சியும் பின்னாலில் இருந்து வேலை செய்து வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருவது கூடுதல் பரபரப்பை தொற்ற வைத்துள்ளது.
தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு இந்த பொங்கல் ஒரு சரியான மோதல் பொங்கலாக இருக்கப் போகிறது.












