இந்தியா
பட்டா மாறுதல் வரலாறு – சொத்து, நிலம் வாங்குபவருக்கு இது அவசியமான வசதி..

தமிழகத்தில் நில ஆவணப் பராமரிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இருக்கப் போகும் “பட்டா வரலாறு” என்ற புதிய சேவையை வருவாய்த்துறை அறிமுகப்படுத்த போகிறது.. நில உரிமையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் தங்களது சொத்தின் கடந்த கால விவரங்களை எளிதாக அறியும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிலம் தொடர்பான மோசடிகள், இரட்டை விற்பனை, போலி ஆவணங்கள் போன்றவை பலரின் கனவுகளை சிதைத்திருக்கிறது.. இதற்கெல்லாம் காரணம், நிலத்தின் கடந்த கால விவரங்களை முழுமையாக அறிய முடியாத நிலை தான்..
இதுவரை நிலம் வாங்கும் போது மக்கள் முக்கியமாக பார்த்தது வில்லங்கச் சான்றிதழ் மட்டுமே.. அதில் தற்போதைய உரிமையாளர் யார், முன்பு யார் யார் அந்த நிலத்தை வைத்திருந்தார்கள், வங்கிக் கடன் இருக்கிறதா என்பதைக் காண முடிந்தது..
பட்டா மாறுதல் வரலாறு மூலம் நிலத்தின் முந்தைய உரிமையாளர்கள் யார், எந்த ஆணையின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது எந்தெந்தக் காலகட்டத்தில் யாரிடம் அந்த நிலம் இருந்தது போன்ற அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் துல்லியமாகப் பெற முடியும்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் உள்ள பட்டா விவரங்களை மட்டுமே தற்போது இச்சேவையின் மூலம் பெற முடியும் என்றாலும், எதிர்காலத்தில் 2014-க்கு முந்தைய ஆவணங்களையும் இதில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதற்கான குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தித் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.














