Connect with us

இந்தியா

கவர்னர் ரவியை அவமதித்த மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய ஐகோர்ட்டில் வழக்கு

Published

on

‘திருநெல்வேலியில் அண்மையில் நடந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், வேந்தரான கவர்னரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும். துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆக., 13ல் 32வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

நாகர்கோவிலை சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப், வேந்தரிடம் முனைவர் பட்டத்தை பெறாமல், துணைவேந்தர் சந்திரசேகரிடம் அளித்து பெற்றுக் கொண்டார்.

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவுறுத்தியும், வேந்தர், தன்னிடம் பட்டம் பெற வேண்டும் என சைகை காண்பித்த போதும், அதை ஜீன் ஜோசப் அலட்சியப்படுத்தினார்.

தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் அவரிடம் பட்டத்தை பெறாமல் மாணவி தவிர்த்ததாக கூறப்படுகிறது. மைக்ரோ பைனான்ஸ் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற ஜின் ஜோசப் என்ற மாணவி இவ்வாறு செய்ததாக தகவல் கூறப்படுகிறது.

பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 759 மாணவ, மாணவியருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பட்டங்களை வழங்கினார். அதில் 109 பேர் (மாணவர்கள் 13, மாணவிகள் 96) தங்கப்பதக்கமும், 650 பேர் (மாணவர்கள் 108, மாணவிகள் 542) முனைவர் பட்டங்களும் பெற்றனர். இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 11638 மாணவர்கள், 25738 மாணவிகள் என்று மொத்தம் 37376 பேர் பட்டம் பெற்றனர். மும்பையிலுள்ள இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநர் பேராசிரியர் அ.பி. டிம்ரி பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் ந. சந்திரசேகர் வரவேற்று, அறிக்கை வாசித்தார். சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ், தேர்வாணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழா நடக்கும் போதே அவர், ‘தன் கணவர் தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ளார். தமிழுக்காக கவர்னர் எதுவும் செய்யவில்லை. அதனால் அவர் கையால் பட்டம் பெற விரும்பவில்லை. பட்டம் வழங்க கவர்னரை விட இணைவேந்தரான உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அதிக தகுதிகள் உள்ளன’ என, பேட்டியளித்தார்.

அரசியல் காரணங்களுக்காக, வேந்தரான கவர்னரை பொது வெளியில் அவமதித்துள்ளார். வேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொள்ளுமாறு துணைவேந்தர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். கல்வி சம்பந்தமான நிகழ்ச்சியை அரசியல் ஆதாய விளம்பரத்திற்காக பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது.

ஜீன் ஜோசப்பிற்கு பட்டம் வழங்கியதில்,பல்கலை சட்டத்தின்படி செயல்படாத துணைவேந்தர் சந்திரசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜீன் ஜோசப்பிற்கு வழங்கிய பட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். என அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இம்மனு நிலைநிற்கத் தக்கதுதானா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. நீதிபதிகள் அடுத்தவாரம் வழக்கை ஒத்திவைத்தனர்.

சினிமா45 minutes ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
A continuous rotation system that steadily strengthens your domain authority..