செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரூ.2000 வரை பெறும் குடும்பங்கள் யார்? முழு விவரம் இங்கே!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரூ.2000 பெறும் அதிர்ஷ்ட குடும்பங்கள்! முழு விவரம்
தமிழ்நாடு அரசு, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமானது ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம். இதன் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இந்த தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை பெற்றவர்கள் அரசு வழங்கும் வேறு திட்டங்களில் ஒரே சமயத்தில் பயனாளியாக இருக்க முடியாது என்பது முக்கிய விதிமுறை.
ஆனால், சில விதிவிலக்குகள் அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சில குடும்பங்கள் மாதம் ரூ.2000 வரை பெறும் வாய்ப்பு உள்ளது.
ரூ.2000 பெறும் குடும்பங்கள் யார்?
மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் அரசின் ஓய்வூதியம் அல்லது பராமரிப்பு உதவித் தொகையை பெறுகிறார்கள் என்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள மற்ற தகுதியுள்ள பெண்கள் ‘மகளிர் உரிமைத் தொகை’ பெறலாம்.
அதாவது,
மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்
பராமரிப்பு உதவித்தொகை
முதியோர் ஓய்வூதியம்
உழவர் பாதுகாப்புத் திட்டம் ஓய்வூதியம்
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஓய்வூதியம்
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம்
ஆதரவற்ற/கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம்
50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழை பெண்கள் ஓய்வூதியம்
இவற்றில் ஏதேனும் பெறும் குடும்பத்தினரின் மற்ற தகுதி உள்ள பெண்கள் கூட இந்த மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதனால் அவர்கள் ரூ.1000 பெற, மற்றும் வீட்டில் ஓய்வூதியமாக ரூ.1000 இருந்தால், சேர்த்து மாதம் ரூ.2000 வரை பெறும் வாய்ப்பு உருவாகும்.
ஒரே நிபந்தனை:
ஓய்வூதியம் பெறுபவர் தனக்கு மகளிர் உரிமைத் தொகை பெற முடியாது. ஆனால் மற்ற தகுதி வாய்ந்த குடும்ப பெண்கள் ரூ.1000 பெறலாம்.
இதன்மூலம் தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித் தொகை குடும்பத்திற்கு கூடுதல் ஆதாரமாக அமைகிறது.



















