செய்திகள்
தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்புகள்: 2025-ல் அறிவிக்கப்பட்ட 10 முக்கிய நலத்திட்டங்கள்!

தமிழக அரசு தலைமையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2025 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த திட்டங்கள் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இவை எந்தெந்த அறிவிப்புகள் என்று விரிவாக பார்க்கலாம்:
1. போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் 1.09 லட்சம் ஊழியர்கள் நேரடியாக பயனடைகின்றனர்.
2. டாஸ்மார்க் ஊழியர்களுக்கு ரூ.2000 சம்பள உயர்வு
23,629 டாஸ்மார்க் ஊழியர்களுக்கு ரூ.2000 சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2025 முதல் அமலில் உள்ளது.
3. ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை உயர்வு
பொங்கல் பரிசுத்தொகை ரூ.500-இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
4. பண்டிகை கால முன்பணம் அதிகரிப்பு
பண்டிகை கால முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 52,000 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
5. மகப்பேறு விடுப்பில் புதுமையான மாற்றம்
தகுதிக்காண் பருவத்திலும் மகப்பேறு விடுப்பை கணக்கிடும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பதவி உயர்வுக்கும் பணி மூப்பிற்கும் சாதகமாக அமையும்.
6. இலவச ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான இலவச ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இது இந்திய அளவில் முதன்முறையாக அமையும் திட்டம்.
7. அகவிலைப்படி 2% உயர்வு
அகவிலைப்படி 2% உயர்வு மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுகிறார்கள்.
8. பண்டிகை கால முன்பணம் ரூ.20,000
பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
9. கல்வி முன்பணம் அதிகரிப்பு
உயர்கல்விக்கான கல்வி முன்பணம்:
முதுகலை – ரூ.1.50 லட்சம்
டிப்ளமோ/தொழில் கல்வி – ரூ.1 லட்சம்
கலை/அறிவியல்/பாலிடெக்னிக் – ரூ.50,000
10. திருமண முன்பணம் ரூ.5 லட்சம் வரை
தமிழக அரசு ஊழியர்களின் திருமணம் அல்லது மகன்/மகள் திருமணத்திற்கு ரூ.5 லட்சம் வரை முன்பணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
























