Connect with us

ஆன்மீகம்

கிருஷ்ண ஜெயந்தி 2025: கிருஷ்ணரை வீட்டிற்கு வரவழைக்கும் வழிபாட்டு முறைகள், விரதம் மற்றும் நெய்வேத்தியம் விவரம்!

Published

on

கிருஷ்ண ஜெயந்தி 2025: கிருஷ்ணரின் பிறந்த நாளில் வழிபாடுகள் மற்றும் பூஜை முறைகள்

ஆகஸ்ட் 16, 2025 அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம தினமான இந்நாளில், பல பக்தர்கள் கிருஷ்ணருக்கு விரதம் இருந்து பூஜைகள் செய்து அவரின் அருள் பெற விரும்புகின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தியின் மகத்துவம்:

மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் சிறப்பானதான கிருஷ்ண அவதாரம், கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, அல்லது கிருஷ்ண ஜெயந்தி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணரே வீட்டிற்கு வந்து அருள் புரிவார் என்ற நம்பிக்கையுடன், பக்தர்கள் வீடுகளை அலங்கரித்து, அவரை வரவேற்கத் தயார் படுகின்றனர்.

விரதம் மற்றும் வழிபாடு எப்படி செய்ய வேண்டும்?

  • முதல் வேலை அதிகாலையில் வீடு முழுவதும் சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இட வேண்டும்.

  • மாவிலையால் தோரணங்கள் கட்டி, பூஜை அறையை பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

  • சிறு குழந்தை போல அரிசி மாவில் கால் தடங்களை வாசலில் இருந்து பூஜை அறை வரை பதிக்க வேண்டும் – இது கண்ணன் வீட்டில் வந்ததை குறிக்கிறது.

  • கிருஷ்ணரின் சிலை அல்லது படத்தை சுத்தம் செய்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும்.

நெய்வேத்தியம்:

  • வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, இனிப்பு சீடை, உலர் சீடை, அதிரசம், தேன்குழல் உள்ளிட்ட பலகாரங்கள் தயாரித்து படையல் இட வேண்டும்.

பூஜை நேரம்:

  • கிருஷ்ண ஜெயந்தியில் மாலை அல்லது நள்ளிரவு பூஜை செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

  • முழு நாளும் விரதம் இருந்து, மாலை வேளையில் பூஜையை தொடங்கி, இரவு முழுவதும் பூஜை செய்து, மறுநாள் காலையில் நெய்வேத்தியத்தை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.

பிள்ளைகளுக்கான மகிழ்ச்சி:
கிருஷ்ணரின் சிறுவயது லீலைகளை, அவரது குறும்புத்தனங்களை கதையாகச் சொன்னால், அவர்கள் ஆன்மிக ஆர்வத்துடன் இணைய வாய்ப்பு அதிகரிக்கும்.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..