இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 08.12.2025

- இன்று 7வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் ரத்து. பயணிகள் கடும் அவதி.
- விமானப் போக்குவரத்தை தனியார் மயமாக்கியதே இந்த பாதிப்புக்கு காரணம் என பயணிகள் குமுறல்
- நகர்ப்புறங்களில் வாழ்க்கை முறை மாற்றத்தால் 22 பெண்களுக்கு ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு – ஒன்றிய சுகாதாரத்துறை
- 12.2025 – தங்கம் விலையில் மாற்றமில்லை. கிராம் ரூ.12040க்கும் சவரன் ரூ.96320க்கும் விற்பனையாகிறது.
- வெள்ளி விலை ரூ.1 குறைந்து கிராம் ரூ.198க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.198000க்கும் விற்பனையாகிறது.
- தமிழசத்தைச் சேர்ந்த பி.எட். மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கிய ஒன்றிய உயர்கல்வி அமைச்சகத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு
- கோவா தீவிபத்து ஏற்பட்ட கேளிக்கை விடுதி முறையான அனுமதியின்றி இயங்கி வந்தது கண்டுபிடிப்பு.
- வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்
- புதுச்சேரி போலி மருந்து மாத்திரைகள் தயாரித்த ஆலை மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு
- ஆரய்ச்சி படிப்பை தாமதமில்லாமல் முடிக்க புதிய இணையதளத்தை தொடங்க தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம் என பாஜகவினர் கூறிவரும் நிலையில் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு கீழே இராவணன் பிறந்த இடம் இருப்பதாக் கூறி அகழாய்வு செய்ய வேண்டும் என மே17 இயக்கம் கோரிக்கை. ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு.
- புதுச்சேரி தவெக கூட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது – புதுச்சேரி காவல்துறை அறிவிப்பு.
- காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிகாலையில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
- நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் கேரளத்தின் எர்ணாகுளம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு… 6 பேர் குற்றவாளிகள்… நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் நடிகர் திலீப் விடுவிப்பு.
- நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என நடிகை தரப்பு அறிவிப்பு.
