இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 07.12.2025

மதுரையில் ”தமிழ்நாடு வளர்கிறது” என்கிற பெயரில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் ரூ.36660 கோடி முதலீட்டில் 56766 வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
”மதுரை மாஸ்டர் பிளான் 2044” ஐ வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டிற்கே உரித்தான தூயமல்லி அரிசி மற்றும் கவுந்நதப்பாடி நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றிற்கு தனித்துவ புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.. – தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அணைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான விருதை வழங்கியது கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பால் முக்கிய ரயில்களில் கூடுதல் ரயில்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அம்பானியின் சொத்து 542 சதவீதமும் அதானியின் சொத்து 1535 சதவீதமும் உயர்ந்துள்ள நிலையில் 28.3 கோடி இந்தியர்கள் கடனில் தத்தளிப்பதாக ஒன்றிய அரசு அதிகாரபுர்வமாக சொல்கிறது.
புதுச்சேரியில் டிசம்பர் 9ம் தேதி நடக்க உள்ள விஜய் பொதுக்கூட்டத்திற்கு 5000 பேர் மட்டுமே அனுமதி. கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கு அனுமதியில்லை. என காவல்துறை நிபந்தனை.
பாஜக ஓட்டுத்திருட்டில் மட்டுமல்ல கட்சித்திருட்டிலும் ஈடுபட்டுள்ளது. – துணை முதல்வர் உதயநிதி.
பாஜகவின் FAKE ID தான் அதிமுக – துணை முதல்வர் உதயநிதி சாடல்.
வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ”படையப்பா” திரைப்படம் 4கே தரத்தில் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்.
கோவா இரவ நேர கேளிக்கை விடுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலி.
