Connect with us

வணிகம்

சொமேட்டோ பயன்பாட்டு கட்டணம் 20 ரூபாயாக உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

Published

on

zomato

உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ (Zomato) தனது பயன்பாட்டு கட்டணத்தை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Eternal Limited நிறுவனம் நடத்தி வரும் சொமேட்டோ மற்றும் பிலிங்கிட் தளங்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக சொமேட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள், கூடுதல் செலவைச் சந்திக்க வேண்டியதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சொமேட்டோ தனது பயன்பாட்டு கட்டணத்தை ஓராண்டுக்குள் இரண்டு முறை அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு, லாபத்தை உயர்த்தும் நோக்கில் முதலில் ₹2 பயன்பாட்டு கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர் 2023 இறுதியிலும், 2024 ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களிலும் கட்டணத்தை உயர்த்தியது.

கடைசியாக, கட்டணத்தை ₹10 ஆக உயர்த்தியபோது, அதனை “பண்டிகை கால பயன்பாட்டு கட்டணம்” என சொமேட்டோ விளக்கியது. ஆனால் தற்போது ₹20 ஆக உயர்த்தியுள்ளதால், சொமேட்டோவில் உணவு வாங்கும் வாடிக்கையாளர்களின் செலவு மேலும் அதிகரிக்கிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Gulets motor yachts.