Connect with us

இந்தியா

வீட்டு வாசலுக்கு வரும் சுவையான வீட்டு உணவு.. ஜொமைட்டாவின் புதிய முயற்சி..!

Published

on

உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜொமேட்டோ சுவையான வீட்டு உணவை சுடச்சுட வீட்டு வாசலுக்கு கொண்டுவந்து கொடுக்கும் புதிய சேவையை தொடங்கி உள்ளது.

உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு புது புது வசதிகளை செய்து அசத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜொமேட்டோ தற்போது என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

zomato
இது வீட்டு சமையல்காரர்கள் உடன் வடிவமைக்கப்பட்ட புதிய வீட்டு உணவுகளை போன்று இருக்கும் என்றும் மலிவு விலையில் இந்த உணவு சுடச்சுட வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் செய்யப்படும் உணவை போன்ற சுவையான கைப்பக்குவத்தில் தயாராகும் இந்த உணவின் விலை ரூபாய் 89 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

குருகிராமில் முதல் கட்டமாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படும் மலிவு விலை உணவை சாப்பிட்டு அனுபவியுங்கள் என்றும் உண்மையான வீட்டு சமையல்காரர்களால் தயாரிக்கப்படும் இந்த மெனுக்கள் நிச்சயம் உங்களை கவரும் என்றும் ஜொமேட்டோ சி.இ.ஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டால் உடல் நிலை பாதிக்கப்படும் என்ற கருத்து பலருக்கும் இருப்பதை அடுத்து வீட்டு சமையல் காரர்களுடன் இணைந்து ஆரோக்கியமான உணவை தயார் செய்கிறோம் என்றும் புதுப்புது வகையான மெனுவை தயாரிக்க வல்லுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் ஆர்டர் கிடைத்தவுடன் அந்த உணவை சூடாக மற்றும் சுவையாக வீட்டின் சுவையில் வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் ஜொமேட்டோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய சந்தையில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் நிலையில் அதனை பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என்றும் எங்கள் உணவு பங்காளிகள் வீட்டு சமையல்காரர்களுடன் இணைந்து ஒவ்வொரு உணவு வகைகளையும் அன்புடனும் அக்கறையுடனும் சமைத்து வருகிறார்கள் என்றும் விலையும் மிகவும் குறைவு என்றும் ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் வீட்டு பாணியில் ஆரோக்கியமான உணவை நாங்கள் வழங்குகிறோம் என்றும் சிறந்த பொருள்களை மட்டுமே உணவு தயாரிப்புக்கு பயன்படுத்துகிறோம் என்றும் இது சுவையானது மட்டுமின்றி உடல் நிலைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும் ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் குருகிராமில் முயற்சி செய்யப்படும் இந்த சேவை படிப்படியாக இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?