உலகம்
பேஸ்புக் பார்த்தா கன்னத்துல ஒரு அறை!…சம்பளத்திற்கு ஆள் வைத்த நபர்….

தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கிறது. அதில் வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலரோ இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர்.
எனவே, தங்கள் பணிபுரியும் அலுவலகங்களிலும் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுகின்றனர். இதனால், வேலை பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மனீஷ் சேதி எனும் இந்தியர் தான் சமூக வலைத்தள பக்கத்திற்கு சென்றால் தன் கன்னத்தில் அறைவதற்காகவே காரா என்கிற பெண்ணை சம்பளம் கொடுத்து பணியமர்த்தியுள்ளார். இதற்காக ஒரு மணி நேரத்திற்கு அப்பெண்ணிற்கு அவர் 8 டாலர் சம்பளமாக கொடுத்து வருகிறார். இதன் காரணமாக உற்பத்தித் திறன் 35-40 சதவீதத்தில் இருந்து 98 சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.