தமிழ்நாடு
திமுக கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்.. ஸ்டாலின் உளறல்.. நிர்வாகிகள் திணறல்..

கோவையில் திமுக மக்கள் சபை கூட்டத்தில் பெண் ஒருவர் ஸ்டாலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. காலை சுமார் 10 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது 10 பேருக்கு மட்டும் கேள்விகள் கேட்க அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் ஆக்ரோஷமாக எழுந்து நின்று இந்தப் பகுதியில் எதற்கு கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என்று கேள்வி கேட்டார். உடனடியாக அங்கிருந்த திமுக நிர்வாகிககள் அந்தப் பெண்னை அப்புறப்படுத்தப்படுத்த முயற்சி செய்தனர்.
ஆனால், அந்த பெண் தொடர்ந்து ஆவேசமாக கேள்வி கேட்டதால் திமுகவினர் திக்குமுக்காடி போயினர். பின்னர் காவல்துறையினர் மற்றும் திமுக மகளிர் அணி மூலமாக அப்பெண்னை அப்புறப்படுத்தினர்.
கிராமசபை கூட்டத்தில் திடீரென்று பெண் கேட்ட கேள்வியால் திமுக தலைவர் ஸ்டாலின் செய்வதறியாது திகைத்தார். வெறுமனே கை அசைத்து, கேள்வி கேட்க வேண்டாம், தள்ளி போங்கள் என்று கூறினார். இந்நிகழ்வால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.d
இறுதியாக கேள்வி கேட்ட பெண்னை போலீசார் அழைத்துச் செல்லும் போது, திமுகவினர் அந்தப் பெண்னை தாக்கியதாக கூறப்படுகிறது.
வீடியோ: https://twitter.com/SakalaVallavan/status/1345277834470670336


