சினிமா செய்திகள்
இளையாராஜா இல்லையென்றால் படம் இயக்க மாட்டேன்!

த்ரில்லர் படங்களுக்கு பெயர் போன இயக்குநர் மிஷ்கின், உதயநிதி ஸ்டாலினை வைத்து தற்போது சைகோ எனும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இளையாராஜா இல்லையென்றால் படமே இயக்க மாட்டேன் என்றும், இதுபோன்ற கதைகளுக்கு சரியான இசையை இளையாராஜாவால் மட்டுமே இசை அமைக்க முடியும் என்றும் கூறீயுள்ளார்.
மேலும், சைக்கோ என்றாலே தமிழ் சினிமாவில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதை எனது சைக்கோ மாற்றும் என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.



















