தொழில்நுட்பம்
மீண்டும் வருமா அந்த பேரழி? 14,300 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய சூரிய புயல் பற்றி அதிர்ச்சித் தகவல்!

மனித வரலாற்றில் ஒரு பேரழிவாகத் திகழும் சூரிய புயல் ஒன்று, கிமு 12,350–ஆம் ஆண்டு (14,300 ஆண்டுகளுக்கு முன்பு) பூமியை தாக்கியது என்பதை சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. புவியின் காந்தப்புலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த புயல், தற்போது இருந்திருந்தால் மின்சாரம், இணையம், செயற்கைக்கோள் தொடர்பு ஆகியவையனைத்தும் முற்றிலும் முடங்கியிருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
சூரிய புயலின் தாக்கம் என்ன?
சூரிய புயல்கள் என்பது, சூரியனில் ஏற்படும் வெப்ப ஆற்றல் வெடிப்புகளால் உருவாகும் அலைகள். இந்த அலைகள் பூமியின் காந்தப்புலத்தில் புகுந்து, தகவல் தொடர்பு, செயற்கைக்கோள், மின்கம்பிகள் போன்றவை மீது கடும் தாக்கம் செலுத்தும்.
பின்லாந்தின் ஓலு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், புதைபடிவ மரங்களின் வளையங்கள் மற்றும் கார்பன்-14 அளவுகளில் ஏற்பட்ட மாற்றம் மூலமாக இந்த புயலின் நேரம் கண்டறியப்பட்டுள்ளது – கிமு 12,350 இல் ஜனவரி–ஏப்ரல் மாதங்களுக்கு இடையில்.
வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 5 பெரிய சூரிய புயல்கள்:
கி.பி. 994
கி.பி. 775
கி.மு. 663
கி.மு. 5259
கி.மு. 7176
இதில் 775-ம் ஆண்டு நிகழ்வே அதிபெரிய புயலாக இருந்தது எனக் கருதப்பட்டாலும், தற்போதைய ஆய்வின்படி கிமு 12,350 புயல் 18% அதிக சக்தி வாய்ந்தது என தெரியவந்துள்ளது.
மீண்டும் சூரிய புயல் வந்தால் என்ன ஆகும்?
இன்றைய உலகம் மின்சாரம், இணையம், செயற்கைக்கோள் வழிசெலுத்தல் போன்றவை மீது முழுமையாக சார்ந்துள்ளது.
இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க் முற்றிலும் செயலிழக்கும்
ஜிபிஎஸ், வங்கி சேவைகள், விமான மற்றும் மருத்துவ அவசர சேவைகள் பாதிக்கப்படும்
2003 ஹாலோவீன் புயல் மற்றும் 1859 காரிங்டன் சம்பவம் ஆகியவை இதற்கான எச்சரிக்கைகள்
🛡️ எதிர்காலத்தை பாதுகாக்கும் முயற்சிகள்:
விஞ்ஞானிகள் தற்போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்:
மேம்பட்ட எச்சரிக்கை அமைப்புகள்
செயற்கைக்கோள்களின் பாதுகாப்பு
மின்சார கட்டமைப்புகளை மீண்டும் வடிவமைத்தல்
இயற்கை பேரழிவைத் தடுக்க முடியாதாலும், விழிப்புணர்வும் தயாராக இருப்பதும் பேரழிவை குறைக்க உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


