தொழில்நுட்பம்
2025-ல் இந்தியா ஆட்சி செய்யும் டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் – மைலேஜ், டிசைன் மற்றும் விலை விவரங்கள்!

மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறும் வேகத்தில், இ-ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையை பிந்திய நிலைக்கு கொண்டு சென்றுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலையில், வாடிக்கையாளர்கள் மின்சார இருசக்கரங்களை தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தப் பின்னணியில், 2025-ல் இந்தியாவில் அதிக விற்பனையாகிய சிறந்த ஐந்து மின்சார ஸ்கூட்டர்கள் குறித்து இங்கே பார்ப்போம்.
1. ஓலா எஸ்1 எக்ஸ் – ₹73,999
Ola S1X 2kWh பேட்டரி வேரியண்ட் மிகவும் மலிவான மற்றும் திறமையான மாடலாகும்.
9.3 bhp பவர்
0-40 கி.மீ வேகம்: 3.4 விநாடிகள்
மொத்த மைலேஜ்: 108 கி.மீ
அதிகபட்ச வேகம்: 101 கி.மீ/மணி
முழு சார்ஜ் நேரம்: சுமார் 7 மணி நேரம்
இது ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் விலை பொருத்தமாக இருப்பதால் மாணவர்கள் மற்றும் தினசரி பயணிகளுக்கு ஏற்றது.
2. டிவிஎஸ் ஐக்யூப் – ₹93,434
TVS iQube ஒரு நம்பிக்கைக்குரிய, ஸ்டைலான இ-ஸ்கூட்டர்.
5.9 bhp பவர்
2.2 kWh பேட்டரி
முழு சார்ஜ் நேரம்: 7 மணி நேரம்
மைலேஜ்: 75 கி.மீ
அதிகபட்ச வேகம்: 78 கி.மீ/மணி
0-40 கி.மீ வேகம்: 4.2 விநாடிகள்
பேட்டரி மற்றும் செயல்திறன் நன்கு சமநிலையுடன் இருக்கும் இந்த மாடல் குடும்ப பயணிகளுக்கு ஏற்றது.
3. ஓலா எஸ்1 எக்ஸ் – 3kWh ஸ்போர்ட்ஸ் மாடல்
0-40 கி.மீ வேகம்: 3.1 விநாடிகள்
அதிகபட்ச பவர்: 7kW (9.38hp)
அதிகபட்ச வேகம்: 115 கி.மீ
IDC சான்றிதழ்படி ரேஞ்ச்: 176 கி.மீ
நிஜ பயண தூரம்: சுமார் 140 கி.மீ
சார்ஜ் நேரம் (0-80%): 9 மணி நேரம்
ஸ்போர்ட்ஸ் மோட்டாரிங் விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.
4. பஜாஜ் சேட்டக் 2903 – ₹98,498
பழமையை புதிய நவீன முறையில் கொண்டு வந்த பஜாஜ் சேட்டக்:
2.9 kWh பேட்டரி
ரேஞ்ச்: 123 கி.மீ
ஹில் ஹோல்ட், 21 லிட்டர் பூட் ஸ்பேஸ்
முழு சார்ஜ் நேரம்: 6 மணி நேரம்
அதிகபட்ச வேகம்: 63 கி.மீ/மணி
வாகனத்தில் புதிய வசதிகள் மற்றும் கிளாசிக் தோற்றம் விரும்புபவர்களுக்கு இது சரியான தேர்வு.
5. விடா வி2 (VIDA V2)
ஹீரோ மோட்டோகார்பின் துணை நிறுவனம் – Vida தயாரித்த V2 மாடல்:
பேட்டரி திறன்: 2.2 – 3.94 kWh
ரேஞ்ச்: 94 – 165 கி.மீ
டிடாட்சபிள் பேட்டரி – வீட்டிலேயே சார்ஜ் செய்யலாம்
பாதுகாப்பு, வசதிகள், மற்றும் சிக்கனத்தில் முன்னிலை வகிக்கும் மாடல்.














