செய்திகள்
தமிழகத்தில் விதவைகளுக்கு மாதம் ரூ.1200 உதவி: இந்தியா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் – முழு விவரம்!

தமிழகத்தில் விதவைகள் நலனுக்கான பெரிய வாய்ப்பு – இந்தியா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம்!
தமிழ்நாட்டில் வறுமையில் இருக்கும் விதவைகள் மாதம் ரூ.1200ஐ அரசு உதவித் தொகையாக பெறும் முக்கிய திட்டம் இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம். இந்த திட்டம் மத்திய அரசால் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது சமூக நலத்துறை மூலம் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் யார் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பதாரர் விதவையாக இருக்க வேண்டும்; மறுமணம் செய்திருக்கக் கூடாது.
வயது 40 முதல் 79 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குடும்பம் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மத்திய/மாநில அரசின் பிற ஓய்வூதியத் திட்டங்களில் பயனாளியாக இருக்கக் கூடாது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ உதவித்தொகை:
மத்திய அரசு:
40-79 வயது: மாதம் ரூ.300
80 வயது மற்றும் அதற்கு மேல்: மாதம் ரூ.500
தமிழக அரசு: மத்திய அரசின் தொகைக்கு மேலாக மாநில உதவித் தொகை வழங்குகிறது. மொத்தமாக மாதம் ரூ.1200 பெறலாம்.
பொங்கல், தீபாவளிக்கு இலவச புடவை, அங்கன்வாடி மையங்களில் இலவச அரிசி வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
அருகிலுள்ள e-Sevai மையம் அல்லது பஞ்சாயத்து / நகராட்சி அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆவணங்கள்:
விதவை சான்றிதழ்
ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு
BPL அட்டை
வங்கி கணக்கு நகல்
முகவரி சான்று
நேரம் எவ்வளவு தேவை?
பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யப்படுகிறது.
பின் ஒரு மாதத்திற்குள் உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
முக்கியம்சம்:
தமிழக அரசு இந்த திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. 2023-24 நிதியாண்டில் ரூ.5,561.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 34,90,969 பயனாளிகள் இதனைப் பெறுகின்றனர்.
