தமிழ்நாடு
‘விஜய் ‘மாஸ்டர்’-காக மட்டும் என்ன பார்க்கலீங்க..!’ – பகீர் தகவலை வெளியிட்ட எடப்பாடியார்

நடிகர் விஜய், சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, திடீரென்று நேரில் சென்று சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பு எதற்கு என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் எதற்காக விஜய் தன்னை சந்தித்தார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியே விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. தற்போது திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பிக் கொள்ள தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக இப்படியான நடைமுறை அமலில் இருக்கிறது. இப்படியான சூழலில்தான் விஜய், முதல்வரை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து எடப்பாடியார் பேசுகையில், ‘விஜய், என்னை வந்தது பார்த்தது வெறுமனே மாஸ்டர் திரைப்படத்துக்காக மட்டுமல்ல. பொதுவாக பலர், பல கோடி ரூபாய் செலவு செய்து திரைப்படங்கள் எடுத்துள்ளனர் என்றும், இதனால் திரையரங்குகள் சீக்கிரமாகவே முழு வீச்சில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரினார். எல்லாருக்காகவும் தான் பேசினார் விஜய்’ என்று கூறியுள்ளார்.














