சினிமா செய்திகள்
சுதந்திரத்தை மோடி வாங்கிக் கொடுத்ததை ஏன் வைக்கல? – மோடி பட ட்ரெய்லரை கலாய்த்த சித்தார்த்!
நடிகர் சித்தார்த் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து சிகப்பு, பச்சை, மஞ்சள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீப காலமாகவே பாஜகவுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வரும் சித்தார்த், நேற்று வெளியான பிஎம் நரேந்திர மோடியின் ட்ரெய்லரில், மோடி, இளம் வயது முதலே நாட்டிற்காக தனியாளாக போராடியாதாகவும், இந்திரா காந்தி உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த ட்ரெய்லரை பார்த்த சித்தார்த், வெள்ளையர்களை விரட்டி இந்தியாவுக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த மோடியின் காட்சிகள் ஏன் படத்தில் வைக்கல? என கேள்வி கேட்பது போல படத்தை கிண்டலடித்துள்ளார்.
ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபாராய் நடித்துள்ள நரேந்திர மோடியின் படம் சொன்ன தேதிக்கு முன்னரே ஏப்ரல் 5ம் தேதியே வெளியாகிறது.

















