Connect with us

வார பலன்

ஜனவரி 27 முதல் பிப்ரவரி 02 வரையிலான வாரபலன்

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

மனதில் நிம்மதி வேண்டி தவிக்கும் மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்ப வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இதனால் பொருளாதார நிலையும் சுமாராக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரியிடம் நற்பெயர் கிடைக்கும். இதுநாள்வரை தங்களுக்கு தடைப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைப்பதற்கு சிறந்த சாத்தியக்கூறு உள்ளது. அதனால் மனதில் நிம்மதி ஏற்படும். சக பணியாளர்கள் உங்களைக் கண்டு பொறாமைப் படுவார்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.

குடும்பச் சூழ்நிலை ஓரளவே மனநிம்மதியை தரும். பிரிந்த கணவன் மனைவியர் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் அதிகரித்து காணப்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இதுவரை தடைப்பட்டுவந்த திருமணம் இப்போது நடக்கும். நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்.

பெண்கள் அடுத்தவர் ஆச்சரிய படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: தினமும் முருகனை வணங்கி கந்தர் அனுபூதி சொல்லி வாருங்கள்.

*****************************************************************************************

ரிஷபம்:

என்றைக்குமே குடும்பத்திற்காக உழைக்கும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். இருப்பினும் செலவுகள் இவ்வாரம் சற்று அதிகரித்து காணப்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடினஉழைப்பு ஏற்படும். தற்போது கல்லூரி படிப்பை முடித்து உள்ளவர்கள் கடுமையாக முயற்சித்தாள் மட்டுமே வேலை கிடைக்கும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் கூட போகலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.

குடும்பத்தில் குழந்தைகள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு நீங்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். உறவினர்களுக்கும் அல்லது நண்பர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் அவற்றை முன் நின்று தீர்த்து வைப்பீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை ஏற்படக்கூடும். நீதிமன்றத்தில் தங்கள் மீது வழக்குகள் ஏதாவது இருப்பின் அது இப்போது தங்களுக்கு சாதகமாக மாறும்.

கல்லூரி படிப்பை முடித்து இருக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தற்போது இருந்து வரும் ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு மாற வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு பிரச்சினையின்றி இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை தினமும் வலம் வரவும். கோளறு பதிகம் படியுங்கள்.

*****************************************************************************************

மிதுனம்:

பணவரவை அதிகம் எதிர்பார்க்கும் மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்பத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்குமா என்றால் சந்தேகம் தான். வீண் செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை.

உத்தியோகஸ்தர்களைப் பொறுத்த வரை வேலைக்கு விண்ணப்பித்து இதுவரை தகவல் வரவில்லையே என மனம் வருந்தி வந்தவர்க்கு நற்செய்தி காத்துள்ளது. தற்போது பணியில் இருந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு ஒன்று. இந்த வாரத்தில் கிடைக்க சிறந்த வாய்ப்பு உள்ளது.

தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு இலாபம் கிடைப்பது மனநிறைவைத் தரும். பண பரிமாற்றம் செய்ய வேண்டி இருந்தால் வாரத்தின் பிற்பகுதியில் செய்யவும். வியாபாரம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவீர்கள். அதற்காக கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம் அது கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். புதிய வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பின் அதற்கான முயற்சிகளை இவ்வாரம் மேற்கொள்ளலாம். அதில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் அவசரப்படவேண்டாம். எதையும் சற்று தீர ஆராய்ந்து பார்த்து பின்பு முடிவு எடுக்கவும். கணவன் மனைவியிடையே அன்னியோனியம் குறைந்து காணப்படும்.

பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள். பெருமாளுக்கு துளசி அணிவியுங்கள்.

***************************************************************************************

கடகம்:

எதிலும் பொறுமையுடன் இருக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்பத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் தங்கள் பணம் உடமைகள் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். மனதில் நிம்மதி இருக்காது. பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் தாங்களே எதிர்பாராமல் கோபப்பட்டு விடுவீர்கள். அதை தவிர்த்திடுங்கள். நிதி நிலையில் மாற்றம் இருக்காது என்றாலும் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.

குடும்பத்தில் சில பொருள்கள் களவு போக வாய்ப்பு உள்ளது. அன்பர்கள் சிலர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினை மேல் கொள் மேற்கொள்வதற்கு சாதகமாக கிரக நிலைகள் அமைந்துள்ளன.

பெண்கள் முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: தினமும் அஷ்ட லட்சுமியை வணங்கி வாருங்கள். தாமரை மலர் கொண்டு பூஜியுங்கள்.

****************************************************************************************

சிம்மம்:

சிறப்பான குடும்ப சூழ்நிலையை விரும்பும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் அன்பர்கள் இவ்வாரம் பிறருக்கு கடன் கொடுக்கவும் அல்லது ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தாயார் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்தால் இப்போது சரியாகிவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

தொழில்துறையினருக்கு சக பாகஸ்தர்களினால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. விஸ்தரிப்பு திட்டங்களில் இந்த வாரம் இறங்க வேண்டாம். வியாபாரிகள் புதிய முயற்சிகள் எதிலும் இந்தவாரம் இறங்க வேண்டாம். பொறுமை அவசியம்.

குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். அதற்கு காரணம் வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகளும் எதிர்பாராத ஏமாற்றங்களுமே ஆகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து விட முடியும். வாடகை வீட்டிலிருந்து வரும் அன்பர்கள் சிலர் இப்போது வேறு வீடு மாற வேண்டியிருக்கும்.

மாணவமணிகள் விடுமுறை நாட்களில் அதிகநேரம் வெயிலில் விளையாட வேண்டாம் ஏனெனில் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விசயங்களில் மனதை அலைய விட வேண்டாம். இந்த வாரம் ஏதாவது நற் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

பெண்மணிகள் குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகளுக்கு சுமாரான வாரம் இது. வேலைக்கு சென்று வரும் பெண்மணிகளும் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும் இந்த வாரம் எதிர்பார்க்க முடியாது. கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: சிவாலயத்திற்கு சென்று நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள்.

*****************************************************************************************

கன்னி:

பெரியோர் ஆசியும் மகான்களின் தரிசனமும் கிடைக்கப் பெறும் கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் வெளிநாடுகளில் வசித்து வரும் உறவினர்கள் இப்போது தங்கள் இல்லத்திற்கு வந்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.தாயாரின் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருவது நல்லது. பணப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தை செலுத்தி வருவது அவசியம்.எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி ஒன்று வரும்.

தொழிலில் புதிய விஸ்தரிப்பு திட்டங்களில் தடைகள் ஏற்படக்கூடும். ஆனாலும் தொழில் பாதிக்கப்படாது. தொழில் துறையினருக்கு நிலுவையிலிருந்த பணம் இப்போது கைக்கு கிடைப்பது சந்தோசத்தை தரும்.

குடும்பத்தில் பண வரவிற்கு குறைவே இராது. சென்ற வாரம் ஏற்பட்ட செலவுகள் எதுவும் இந்த வாரம் இருக்காது. குடும்ப ரீதியாகவோ அல்லது தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அவற்றை வாரத்தின் பிற்பகுதியில் எடுக்கலாம். சகோதரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும்.

மாணவமணிகள் தாங்கள் சிரமப்படும் தருணத்தில் சக மாணவர்களிடம் உதவி கிடைப்பது மன ஆறுதலை அளிக்கும். விளையாட்டுக்கள் போட்டிகளில் இவ்வாரம் நீங்கள் செல்ல வேண்டாம்.

பெண்களுக்கு உற்சாகமான வாரம் இது வேலைக்கு சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது. அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படும்

பரிகாரம்: புதன் கிழமைகளில் சீனிவாசப் பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

****************************************************************

துலாம்:

முடிவுகள் எடுக்கும் தருணத்தில் மனக்குழப்பம் ஏற்படும் துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் இப்போது சரியாகிவிடும். அதனால் மன நிம்மதி பெறும். பண வரவிற்கு குறைவிராது. செலவுகள் ஏற்பட்டாலும் தங்களால் அதை சமாளித்து விட முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.

தொழிலில் உற்பத்தி சுமாராக இருக்கும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. புதிய முயற்சிகளில் இறங்குவதை சற்று தள்ளிப் போடவும். வியாபாரத்தில் முன்னேற்றம் எதையும் இந்த வாரம் எதிர்பார்க்க முடியாது. எனவே பொறுமையாக இருந்து வருவது அவசியம்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண வயதில் உள்ள துலா ராசி அன்பர்களின் மனதிற்கு பிடித்த வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்படும். வழக்குகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். மொத்தத்தில் மகிழ்ச்சியான வாரம்.

மாணவமணிகள் பள்ளிக்கு வரும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அண்டை அயலாருடன் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே கூடியவரை வீண்விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

பெண்கள் மனதில் விரக்தி மனப்பான்மை ஏற்படக்கூடும். வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு ஏற்பட வாய்ப்புள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் புதிய கடனை ஏற்க வேண்டாம்.

பரிகாரம்: தினமும் துர்காதேவியை வணங்கி வாருங்கள். துர்காஷ்டகம் படியுங்கள்.

******************************************************************************************

விருச்சிகம்:

தெளிவான முடிவுகளை கண்டிப்புடன் எடுக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்ப வருமானம் நல்லபடி இருந்து வரும் செலவுகள் அனைத்தும் இந்த வாரம் கட்டுக்கடங்கி இருக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் தங்களுக்கு உற்சாகத்தை தரும். தக்க தருணத்தில் பிறருக்கு தாங்கள் உதவுவது அவர்களது ஆசியும் பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும் இந்த வாரத்தில் எதிர்பார்க்க முடியாது சிலருக்கு தாங்களே எதிர்பாராத வகையில் ஊர் மாற்றம் ஏற்படக்கூடும். அதனால் தாங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.

தொழில் உற்பத்தி நல்லபடி இருக்கும். வருமானம் திருப்தி தரும். புதிய அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாரம் தாராளமாக மேற்கொள்ளலாம் சக பாகஸ்தர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும்.

குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நீண்ட நாளைய வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமான தீர்ப்பை கொண்டு வரும். குடும்ப பொறுப்புகளின் காரணமாக உழைப்பு வழக்கத்தைவிட சற்று அதிகரித்து காணப்படும். அதனால் மனதில் விரக்தி உண்டாகும்.

மாணவமணிகள் விளையாட்டுக்கள் போட்டிகளில் இவ்வாரம் கலந்து கொள்ள வேண்டாம். சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியிடங்களுக்கு தனியாக செல்ல வேண்டாம்.தேவையான அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கும்.

பெண்மணிகள் குடும்பத்தில் எதிலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது அவசியம். வேலைக்கு சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் அதி ஜாக்கிரதையாக இருந்து வருவது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

பரிகாரம்: மஞ்சள் நிற பூக்களை கொண்டு குரு பகவானை வழிபடுங்கள்.

********************************************************************************************

தனுசு:

தொழிலில் உன்னத நிலையை அடைய விரும்பும் தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து வருவது அவசியம். திருமண வயதில் உள்ள தனுசு ராசி அன்பர்களுக்கான வரன் தேடும் முயற்சி தடைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இவ்வாரம் சற்று கவனமாக இருந்து வருவது நல்லது. தாங்கள் செய்த சிறு தவறை கூட சக ஊழியர்கள் பெரிதுபடுத்தி காட்டுவார்கள். அது மேலிடத்தில் தங்கள் மீதுள்ள நல்ல அபிப்பிராயத்தை பாதிக்கக்கூடும்.

தொழிலில் முன்னேற்றம் எதையும் இந்த வாரத்தில் எதிர்பார்க்க முடியாது. சற்று பொறுமையாக இருந்து வரவும் மற்றபடி தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தொடரவும்.

குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களிடமோ அல்லது குடும்ப நண்பர்களிடமும் கோபப்பட்டு பேசி வீண் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். வேலை காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காகவோ கணவன்மனைவியர் இவ்வாரம் பிரிந்திருக்க நேரிடும்.

மாணவமணிகள் விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தருணத்தில் தங்கள் மனதினை முழுவதுமாக கல்வியில் செலுத்துவது அவசியம்.

பெண்கள் கடின உழைப்பு ஏற்படக்கூடும். எதிர்பார்த்த விசயங்கள் நடப்பது சற்று கடினமே. தேவையான பொருட்கள் வாங்குவதற்கு செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.

பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வாருங்கள்.

*********************************************************************************

மகரம்:

மந்திர வார்த்தைகளால் பிறர் மனதை கொள்ளையடிக்கும் மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிறுவன மாற்றமோ அல்லது ஊர் மாற்றம் ஏற்படக்கூடும்.அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். நன்கு அறிமுகமான நபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவார்கள்.

தொழிலில் புதிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கவனம் தேவை.அவசர முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் கவனம் தேவை. சக பாகஸ்தர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக செலவு செய்து மாற்றங்களை செய்வீர்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

மாணவமணிகள் வெளிநாடு சென்று கல்வி பயில விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவமணிகளுக்கு நற்செய்தி ஒன்று இந்த வாரம் தேடி வரும். விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கிடைப்பதற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது

பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வேலைக்கு சென்று வரும் பெண்கள் சிலருக்கு பணி மாறுதல் உண்டு. ஆனாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

பரிகாரம்: நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும்.

*************************************************************************************

கும்பம்:

எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிறு விஷயத்திற்கு கூட உணர்ச்சிவசப்பட்டு பேசுவதினால் பிரச்சினைகள் எழக் கூடும். பழைய கடன்களை முற்றிலுமாக அடைத்து மன நிம்மதி பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது மன வருத்தத்தை தரும். மொத்தத்தில் அதிருப்தியான வாரமிது.

தொழில்துறையினர் முன்னேற்றம் அதிகமாக லாபம் என அனைத்தையும் இந்த வாரம் எதிர்பார்க்கலாம். அவ்வப்போது மனச்சோர்வு ஏற்பட்டு மறையும். கொடுக்கல்வாங்கலில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம் அதனால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது அதிககவனம் தேவை.

குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

மேற்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அதை எதிர் கொள்வதன் மூலம் சிறந்த எதிர்காலம் காத்துள்ளது. உங்களுக்கு நண்பர்களால் பிரச்சினை அதனால் மன நிம்மதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு பிரச்சனையில்லாத வாரம் இது. பணிக்கு சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

பரிகாரம்: பெருமாளுக்கு வெண் தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

****************************************************************************************

மீனம்:

முன்கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்ட பாதையில் முன்னேற்றங்கள் பல காணும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்க மானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிறுவன மாற்றமோ அல்லது ஊர் மாற்றம் ஏற்படக்கூடும்.அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். நன்கு அறிமுகமான நபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவார்கள்.

தொழில் உற்பத்தி அமோகமாக இருக்கும். வருமானம் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கைக்கு கிடைப்பது நிம்மதியைத் தரும். ஏற்றுமதி இறக்குமதி துறையினருக்கும் அனுகூலமான வாரமிது. வியாபாரத்திலும் நன்மை அளிக்கக்கூடிய வாரமாக இது அமையும். புது வாடிக்கையாளர்கள் மனதில் மகிழ்ச்சியை அளிப்பீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.

மாணவமணிகளுக்கு மனதில் ஏற்பட்டு வந்த சஞ்சலங்கள் விலகுவதால் படிப்பில் கவனம் திரும்பும். விடுமுறை நாட்களில் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்கள் குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண் மணிகளுக்கு பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். வேலை பார்த்து வரும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம் என்றே சொல்ல வேண்டும். தொய்வின்றி வேலைகள் நடக்கும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும்.

*******************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

12.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: இன்று திதி, நட்சத்திரம், யோகம், ராகு காலம் & நல்ல நேரம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

12.02.2026 தினசரி ராசிபலன்: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமா?

வணிகம்11 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் 2026: 10 ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு பென்ஷன்? முழு கணக்கீடு இதோ!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

குருபகவான் அருள்: பிப்ரவரி 23 முதல் இந்த 4 ராசிகளுக்கு சுப யோகம் – செல்வம், அமைதி, முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

கோயம்புத்தூரில் TNSRLM வேலைவாய்ப்பு 2026: வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 28 காலியிடங்கள் – பிப்ரவரி 16 வரை விண்ணப்பிக்கலாம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மகாசிவராத்திரி ராசிபலன் 2026: மூன்று ராஜயோகங்களால் 3 ராசிகளுக்கு வாழ்க்கை மாற்றம் – துன்பங்கள் விலகும்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி செய்தி! ஓய்வூதியத்தில் மாற்றமா? மத்திய அரசு தெளிவான விளக்கம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சுக்ராதித்ய யோகம் 2026: பிப்ரவரி மாதம் 5 ராசிகளுக்கு அபார அதிர்ஷ்டம் – செல்வம், பதவி உயர்வு, திருமண யோகம்!

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தஜித் துளிகள் – 11.02.2026

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

பெண்களை பாதிக்கும் மற்றொரு வகை புற்றுநோய் -…சிகிச்சையால் குணமாகும்…

சினிமா7 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா6 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

கிரிக்கெட்6 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

சினிமா4 நாட்கள் ago

விஜய்யின் கடைசி படம் ‘ஜன நாயகன்’: புது ரிலீஸ் தேதி பிப்ரவரி 20? கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!

வணிகம்4 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்கள் DA உயர்வு 2026: ஜனவரியில் 2% உயர்ந்தால் சம்பளம் எவ்வளவு கூடும்? HRA, TA, 8வது ஊதியக்குழு அரியர் முழு விவரம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு இணையதளம் தொடக்கம்: மத்திய அரசு ஊழியர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு | கடைசி தேதி மார்ச் 16, 2026

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் 709 வேலைவாய்ப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.02.2026

வணிகம்4 நாட்கள் ago

EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம் குறையுமா? மார்ச் CBT கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவு!

Translate »
De bedste smags oplevelse tilbud i dag. De bedste action oplevelse tilbud i ballerup. : durch unseren mobilen service kommen wir zeitnah zu ihnen und erstellen das gutachten vor ort.