Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன் (ஜூலை 7 முதல் 13 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

எப்போதும் வெற்றியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும் மேஷ ராசி அன்பர்களே நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரம் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பதவி உயர்வு விசயமாக நல்ல செய்திகள் வரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும்.

பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நன்மை தரும்.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

************************************************************************************************

ரிஷபம்:

யாரிடம் எதை பேச வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி போன்றவர். இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை மாறுதல்களுக்காக விண்ணப்பித்திருந்தவர்கள் இப்போது கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும்.

பெண்களுக்கு காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும்.

மாணவர்கள் கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும்.

பரிகாரம்: மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************************************

மிதுனம்:

வெற்றி தோல்வியை சந்திக்க தயங்காத மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பவர். இந்த வாரம் காரியதாமதம் ஏற்படக்கூடும். வீண் பிரச்சனைகள் ஏற்படும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். வரவேண்டிய நிலுவைப்பணம் இருந்தால் இப்போது வந்து சேரும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.

பெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை மனதில் வாங்கி படிப்பது வெற்றிக்கு உதவும். அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

பரிகாரம்: உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

************************************************************************************************

கடகம்:

மற்றவர்களால் முடியாத காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய கடக ராசி அன்பர்களே, நீங்கள் கேளிக்கையில் ஈடுபாடு உடையவர். இந்த வாரம் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள்.

தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக செயல்படுவது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பெண்கள் பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அதனால் நற்பெயர் உண்டாகும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

************************************************************************************************

சிம்மம்:

மற்றவர்களின் ஏளனப் பேச்சுகளைத் தாண்டி வெற்றி நடைபோடும் சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.

தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். உடன் பணிபுரிபவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.

பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

பரிகாரம்: விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

************************************************************************************************

கன்னி:

வாழ்வின் கணவுகளை நிஜமாக்கும் கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் உலக அனுபவம் பெற்றவர். இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும்.

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது.

பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
மாணவர்களுக்கு முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

பரிகாரம்: அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வர மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

************************************************************************************************

துலாம்:

லாபத்தை துல்லியமாக கணக்கிடும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. மறைமுக எதிரிகள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது.

பெண்களுக்கு பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலை தரும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படிப்பது நல்லது.

பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசத்தை தினமும் படித்து வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************************************

விருச்சிகம்:

எதையுமே தொலை நோக்கு பார்வையுடன் துல்லியமாக கணக்கிடப்படும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். நற்பலன்கள் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.

குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.

பெண்கள் எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். தேவையான பணவரவு இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி வரும்.

பரிகாரம்: வடலூர் ராமலிங்க சுவாமிகளை வணங்கி ஜோதி தரிசனம் செய்வது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

************************************************************************************************

தனுசு:

பேச்சினால் அனைவரையும் வசீகரிக்கும் தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த வாரம் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம். பண பற்றாக்குறை ஏற்படலாம்

தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. .

பெண்களுக்கு மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

மாணவர்களுக்கு பாடங்கள் எளிதாக புரியும். படிப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

********************************************

மகரம்:

ஒரு காரியங்களை நேர்கோட்டில் செயல்படுத்தநினைக்கும் மகர ராசி அன்பர்களே, நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த வாரம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்ட மிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடவேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி வரும்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேய பகவானை வெண்ணெய் சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, செவ்வாய்

************************************************************************************************

கும்பம்:

எந்த பிரச்சனையிலும் துல்லியமாக செயல்படும் கும்ப ராசி அன்பர்களே, நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். இந்த வாரம் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடிதனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும்.

பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை பூஜித்து வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, செவ்வாய்

************************************************************************************************

மீனம்:

சேமிப்பு அதிகரிக்க பாடுப்பட்டு முன்னேறும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் காரிய தடைதாமதம் ஏற்படலாம் கவனமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் ஏற்படும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அடைவதற்கான வழிகள் தென்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும்.

பெண்கள் எந்த ஒரு சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள மணிமங்கலம் ஸ்ரீராஜகோபால பெருமாளை தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

************************************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Staff editor, author at coconut point residences. Their nationwide fleet covers all states with power only or full loads, earning consistent praise for efficiency. heavy equipment transport westmoreland pa.