டிவி
ஸ்வீட் பண்ண சொன்னால் ஃபைட் பண்ணிட்டு இருக்காங்க.. கடும் கோவத்தில் கமல்!

பிக்பாஸ் சீசன் 6 இன்றைய ப்ரோமோவில், ஸ்வீட் பண்ண சொன்னால் ஃபைட் பண்ணிட்டு இருக்காங்க என கோவமாகக் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
இன்றைய ப்ரோமோவில், “ஸ்வீட் பண்ண சொன்னால் ஃபைட் பண்ணிட்டு இருக்காங்க, பணம் சம்பாதிப்பது தான் குறி என ஆகிடுச்சோ, பதுக்கலும் சுரண்டலும் ஆரம்பிச்சிடும், நாடு மாதிரியே வீட்டுலையும் அதான் ஆரம்பிச்சுடுச்சு.
இப்போது இவங்க காட்டும் முகம் தான் உண்மையான முகமா இல்ல புதுசா போட்டுக்கொண்ட முகமூடியா… பார்ப்போம்” என முடிந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 105 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், 34 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்த வாரம் அவர்களுக்கு ஸ்வீட் ஃபாக்ட்ரி எனும் டாஸ்க் வழங்கப்பட்டது.
அதனை செய்ய கண்ணா லட்டு தின்ன ஆசையா, அட.. தேன் அட என இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடினர்.
இந்த டாஸ்க் செய்யும் போது ஸ்வீட் செய்தார்களோ இல்லையோ, இரு குழுவினர்கள் இடையிலும் சண்டை அதிகளவில் நடந்ததைக் காண முடிந்தது. எப்போது தான் இந்த சண்டை முடியும், சுவாரஸ்யமாக விளையாடுவார்கள் என பார்க்கும் நமக்கே கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது கமல் அதை எப்படி கையாள போகிறார் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடையில் எழுப்பியுள்ளது.
இந்த டாஸ்க் ஆரம்பிக்கும் போது, இவர்கள் செய்யும் ஸ்வீட்டுகள் ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.