Connect with us

தமிழ்நாடு

தன்னார்வலர்கள் உதவி செய்ய தடையில்லை.. தமிழக அரசு விளக்கம்!

Published

on

ஊரடங்கின் போது தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தன்னிச்சையாக உணவு வழங்கத் தடை விதிப்பதாகத் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.

இன்று விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, “சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது.

அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில், பொது மக்கள் கூடுவதற்கு எந்த ஒரு தடை உத்தரவும் கிடையாது.

ஆனால் தற்போது, இந்த பேரிடர், கொடிய வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம். இந்தத் தொற்று யாரிடம் உள்ளது, அது எப்போது, யாருக்கு யார் மூலம் பரவும் என தெரியாத நிலையில், நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் தான், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இயல்பான நகர்வுகளுக்கும், தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும், நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், அதே சமயம் நோய்த் தொற்று பரவுவதை தவிர்க்கவும், முறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்.

எனவே, புயல், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவது போல தற்போது உதவி செய்ய ஆரம்பித்து விட்டால், நோய்த் தொற்று தான் அதிகமாகும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள். அதனால் தான் எந்த ஒரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும், அதை முறையாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடமோ, மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமோ, மண்டல அலுவலர்களிடமோ, நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி ஆணையரிடமோ, பேரூராட்சியாக இருந்தால், செயல் அலுவலரிடமோ, ஊராட்சி ஒன்றியமாக இருந்தால், வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம்.

மேலும், இத்தகைய உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம். இதை விநியோகப்பதற்கென அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையிலும், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு, அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இப்பணியில் தன்னார்வலர்களும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம்.

அதற்கென சம்பந்தப்பட்ட அலுவலரின் தொலைபேசி மற்றும் கைபேசி எண்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்களும், மற்ற தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாநில அளவில் கொரோனா நிவாரணத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட 12 குழுக்களில், ஒரு குழு தன்னார்வலர்களின் தனித்திறன் மற்றும் ஆர்வத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கு, மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, இப்பணிகள் சீரிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே முதியோர், மாற்றுத் திறனாளிகள், நம் மாநில மற்றும் இதர மாநில தொழிலாளர்கள், ஆதரவற்றோர் போன்றோருக்கு நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கிட, 2,500க்கு மேற்பட்ட நிறுவனங்களும், 58 ஆயிரம் தன்னார்வலர்களும் தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்து கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சமூக இடைவெளி மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

stopcorona.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் நிவாரணம் மற்றும் தன்னாவலர்களை ஒருங்கிணைப்பதற்காக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மூலம் நிவாரணங்கள் ஒருங்கிணைந்து வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, அரசின் நோக்கம் உதவி செய்வதைத் தடுப்பது அல்ல. தற்போதைய நோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நிவாரண உதவிகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. இதற்கு ஓரிரு நியாய விலைக் கடைகளில் கூடும் கூட்டத்தை காரணம் காட்டி, நியாயப்படுத்தி பேசுவதும் சரியல்ல. நியாய விலைக் கடைகள், பிற அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் இதர கடைகளில் கூடும் கூட்டத்திலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ள இந்த அரசு, அதை தீவிரமாக கண்காணித்தும் வருகிறது.

ஏற்கனவே, அரசு நேற்றைய தினம் (12.4.2020) வெளியிட்டுள்ள செய்தி
வெளியீட்டில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு
உள்ளன. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி
செயல்படத் தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை
விதிக்கவில்லை. மாறாக விருப்பத்தோடு வரும் தன்னார்வலர்கள் மற்றும் இதர
தொண்டு நிறுவனங்களின் நிவாரண உதவிகள், மாவட்ட நிர்வாகத்தோடு
இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொது மக்களுக்கு பாதுகாப்பான
முறையில் சென்றடைவதை உறுதி செய்யத்தான் அரசு அறிவுறுத்தியதே தவிர,
தடை விதிக்கவில்லை என்து தெளிவுபடுத்தப்படுகிறது.

இந்நிலையில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், திரு. வைகோ மற்றும் திரு. கே.எஸ்.அழகிரி போன்ற தலைவர்களும், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு அரசு தடை விதித்து விட்டது போல் உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் அரசு, எந்தவிதமான அரசியலும் செய்யவில்லை. கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் தமிழ்நாடு அரசின் இந்த உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டு, அனைத்துத் தரப்பினரும்
ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா20 minutes ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா27 minutes ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா3 மணி நேரங்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை 2026: மகாலட்சுமி ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு!

வணிகம்10 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சுக்கிரன் கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி 2026: மாளவ்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு செல்வம் & காதல் வெற்றி!

வணிகம்10 மணி நேரங்கள் ago

டிஏ உயர்வு 2026: 60% வரை அகவிலைப்படி – சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 நல்ல செய்திகள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழு பலன் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

வணிகம்6 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
Wenn du gurken im topf anbauen möchtest, ist die wahl des richtigen standorts entscheidend für den erfolg. Free link building tool | automated seo backlinks | martinstools. produkcja kontraktowa kosmetyków specjalistycznych.