சினிமா செய்திகள்
லைகா அபராதமாக கொடுத்த ரூ.5 லட்சம்: விஷால் என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கு பொய் வழக்கு என நிரூபணம் ஆனதை எடுத்து வழக்கு செலவாக நடிகர் விஷாலுக்கு லைகா நிறுவனம் ரூபாய் 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு தமிழக திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ரூபாய் ஐந்து லட்சத்தை தனது தேவி அறக்கட்டளை மூலம் ஏழை எளிய குழந்தைகளின் கல்விச் செலவுக்கு செலவு செய்யப் போவதாக விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏழை குழந்தைகள், படிக்கும் வசதி இல்லாத குழந்தைகள் தேவி அறக்கட்டளையை அணுகலாம் என்றும் கல்விக்காக உதவுகின்ற இந்த அறக்கட்டளை மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதிப்பு மிகுந்த நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் லைக்கா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்த பணம் தற்போது தங்களிடம் வந்திருப்பதாகவும், இந்த பணத்தை தாங்கள் ஏற்கனவே தேவி அறக்கட்டளைக்கு அளித்துள்ளதாகவும் இதன் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்ய இருப்பதாகவும் எனவே பண உதவி தேவைப்படும் குழந்தைகள் தேவி அறக்கட்டளையை அணுகலாம் என்றும் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லைக்கா நிறுவனம் கொடுத்த 5 லட்ச ரூபாய் வழக்கு செலவுக்காக நீதிமன்றம் அளித்திருந்த போதிலும் அந்த பணத்தை அவர் தானே எடுத்துக் கொள்ளாமல் ஏழை எளிய குழந்தைகளுக்கு அவர் செலவழிக்க இருப்பது திரையுலகினர் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் விஷால் தற்போது ’எனிமி’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்றும் அதன்பிறகு தற்போதுதான் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















