ஜோதிடம்
கன்னி ராசிக்கு 2025 சனி பெயர்ச்சியின் முக்கிய பலன்கள்: எச்சரிக்கையுடன் இருங்கள்!

வரும் 2025 மார்ச் 29ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி செய்ய உள்ளார். கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த பெயர்ச்சி, 6ஆம் வீட்டில் இருந்து 7ஆம் வீட்டிற்கு இடமாற்றம் ஆகும். 6ஆம் வீடு கடன், நோய், எதிரிகளை குறிக்க, 7ஆம் வீடு திருமண வாழ்க்கை மற்றும் தொழில் கூட்டாளிகளை குறிக்கிறது.
சனி பெயர்ச்சியால் எதிர்பார்க்கப்படும் நன்மைகள்:
தங்களின் சுயஜாதகத்தில் வலுவான தசை, தசாபுத்தி இருந்தால் நன்மைகள் கிடைக்கும். ராசிக்கு 9ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால், திருமணத் தடை விலகுவதற்கும், கல்வி, வேலை ஆகியவற்றில் சிறப்பு பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதில் சிறப்பாக, நீண்ட நாட்களாக நினைத்த சில ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
சனி பகவானால் ஏற்படும் சவால்கள்:
7ஆம் இடத்தில் சனி பகவானின் இருப்பு திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தக் கூடும். சொந்த உறவுகளுடன் சுமூகமாக இருப்பது சவாலாக இருக்கும். பேச்சு குறைத்து, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
ராகு மற்றும் கேது கோளங்கள்:
சனி மற்றும் ராகுவின் சேர்க்கை நட்பு மற்றும் உறவுகளில் சிக்கல்களை உருவாக்கக் கூடும். அதேபோல் ராசியில் உள்ள கேது உடல் நலனில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம், எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சனி பகவானின் 3ஆம் பார்வை 9ஆம் இடத்தை பாதிப்பதால் தந்தையுடன் தொலைதூர பயணங்கள் நிகழலாம். 10ஆம் பார்வையால் வீடு, நிலம், வாகனம் போன்ற ஆவணங்களில் சிக்கல்களை உருவாக்கும்.
வழிபாடும் பரிகாரமும்:
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவானை வழிபாடு செய்து நள தீர்த்தத்தில் நீராடி, நல்லெண்ணை தீபம் ஏற்றும் வழிபாடுகள் நன்மைகளை தரும். தினமும் சனி காயத்ரி மந்திரத்தை 21 முறை உச்சரிக்கவும், அருகில் உள்ள சிவாலயத்தில் எள் தானம் செய்வது சனி பகவானின் ஆதரவினை பெற உதவும்.





