வீடியோ
விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’ டீசர்!

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி படத்திற்குப் பிறகு ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் டாணாக்காரன்.
விக்ரம் பிரபு ஏற்கனவே காவல் துறை அதிகாரியாக நடித்து இருந்தாலும், இதற்கு முன்பு பல்வேறு காவல் துறை அதிகாரிகள் பற்றிய படங்கள் வந்து இருந்தாலும் அதிலிருந்து முழுவதும் புது விதமாக டாணாக்காரன் டீசர் உள்ளது.
விக்ரம் பிரபுக்கு புலிக்குத்தி பாண்டி தவிர அதற்கு முன்பு வெளியான பல படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.
ஆனால் டாணாக்காரன் டீசரை பார்க்கும் போது விக்ரம் பிரபுக்கு திருப்புமுனையாக இந்த படம் இருக்கலாம். காவல் துறை தேர்வு, பயிற்சி பதவி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் படமாக டாணாக்காரன் டீசர் உள்ளது.