சினிமா செய்திகள்
சூர்யா 40 படத்தின் டைட்டில் மற்றும் வீடியோ ரிலீஸ்!

பிரபல நடிகர் சூர்யா நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இதற்காக சூர்யாவின் ரசிகர்கள் இன்று காலை முதல் காத்திருந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது
இந்த வீடியோவில் சூர்யாவின் 40வது படத்தின் டைட்டில் ’எதற்கும் துணிந்தவன்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அட்டகாசமாக சூர்யாவின் காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, ப்ரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Double Treat!#EtharkkumThunindhavan second look @ 12 AM@Suriya_offl @pandiraj_dir @immancomposer @RathnaveluDop @priyankaamohan#EtharkkumThunindhavanSecondLook #ETsecondlook #HappyBirthdaySuriya #ET#எதற்கும்துணிந்தவன் pic.twitter.com/m9A2ypfHw8
— Sun Pictures (@sunpictures) July 22, 2021