Connect with us

சினிமா

முதல் காட்சி முடிந்தவுடன் வைரலாகும் நெகட்டிவ் விமர்சனங்கள்: ‘பீஸ்ட்’ படம் எப்படி இருக்கு?

Published

on

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் முதல் காட்சி முடிந்தவுடன் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரவி வருவதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படம் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

ராஜஸ்தானில் குழந்தையின் பலூன் ஒன்று அதன் கையைவிட்டு பறக்க, அந்த பலூனை விஜய் எடுத்துக் கொடுக்கும் காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. அப்போது திடீரென ஏற்படும் பயங்கரவாத தாக்குதலில் பறந்து பறந்து விஜய் தீவிரவாதிகளை சுட்டுக் கொல்கிறார். அப்போது எந்த குழந்தைக்கு பலூன் எடுத்து கொடுத்தாரோ அந்த குழந்தை எதிர்பாராமல் இறந்து விடுகிறது. இதனால் விரக்தி அடையும் விஜய் ‘ரா’வில் இருந்து வெளியேறுகிறார்.

அதன் பிறகு சென்னை வந்து விடிவி கணேஷ் நடத்தும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அங்கு பூஜா, ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலரும் பணிபுரிய படம் காமெடியாக செல்கிறது. இந்த நேரத்தில் விஜய் உள்பட அவரது நிறுவனத்தில் உள்ள அனைவரும் மால் ஒன்றுக்கு செல்ல அந்த மாலை பயங்கரவாதிகள் ஹைஜாக் செய்கின்றனர்.

beastதங்கள் தலைவரை விடுதலை செய்தால் மட்டுமே பணய கைதியாக இருப்பவர்களை விடுவிப்போம் என்று பயங்கரவாதிகள் தரப்பில் கோரிக்கை வைக்க, செல்வராகவன் அமைச்சர்களுடன் இது குறித்து ஆலோசனை செய்கிறார். அப்போது விஜய் தனி ஆளாக அந்த பயங்கரவாதிகளை தீர்த்துக்கட்டி ஹைஜாக் பண்ணப்பட்ட பணயக்கைதிகள் அனைவரையும் எப்படி விடுவிக்கின்றார் என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது.

‘பீஸ்ட்’ படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அனிருத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவாளரின் அபாரமான கேமரா கோணங்கள்> மற்றபடி படத்தில் வேறு எதுவுமே இல்லை. இயக்குனர் நெல்சன் படங்களில் இருக்கும் காமெடி ஆங்காங்கே இருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது .

படுவீக்கான வில்லன் கேரக்டர் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ். ஷைன் சாக்கோ கேரக்டர் டுவிஸ்ட்டாக திடீரென மாறினாலும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கொஞ்சம் போக்கிரி படத்தை பார்த்தமாதிரி ஆங்காங்கே காட்சிகளும் உள்ளன. மொத்தத்தில் அனிருத்தின் பின்னணி இசை மற்றும் கேமரா ஆகிய இரண்டைத் தவிர இந்த படம் முழுக்க முழுக்க தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களுக்கு மட்டுமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?