சினிமா
’கே.ஜி.எப் 2’ திரைவிமர்சனம்: ராக்கிபாய் சாம்ராஜ்யம் ஆரம்பம்

கலந்த 2018ஆம் ஆண்டு ’கேஜிஎப்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து ’கேஜிஎப்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம் .
தங்கச் சுரங்கத்தை தனி ஒரு ஆளாக ஆட்சி செய்து வந்த கருடா என்ற வில்லனை கொன்று ராக்கி பாய் கைப்பற்றியதோடு முதல் பாகம் முடிகிறது. இதனை அடுத்து இரண்டாம் பாகத்தில் கருடா பறி கொடுத்த சுரங்கத்தை மீட்க அதிரா வருகிறார். இதற்கிடையில் பிரதமர் எடுக்கும் அதிரடி நடவடிக்கை என்ன? அதிரா மற்றும் பிரதமர் ஆகிய இருவரையும் சமாளித்து தங்கச் சுரங்கத்தை தனதாக்கிக் கொண்டாரா ராக்கிபாய் என்பதுதான் இந்த இரண்டாம் படத்தின் கதை.
முதல் பாகத்தில் ராக்கிபாயின் அறிமுகக் காட்சிகள், வில்லன்களின் அறிமுகக் காட்சிகள், பில்டப் காட்சிகள், ஒரு சில ரொமான்ஸ் காட்சிகள் என படம் முடிந்துவிடும். மெயின் கதை இரண்டாவது பாதியில் தான் ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டாம் பாகத்தில் படம் ஆரம்பித்தவுடன் கதையும் ஆரம்பித்துவிட்டது. ராக்கி பாயாக யாஷின் மாஸ் என்ட்ரி, அதிரா கேரக்டரில் நடித்த சஞ்சய் தத்தின் வேற லெவல் எண்ட்ரி மற்றும் பிரதமர் கேரக்டரில் மிகச்சரியாக பொருந்திய ரவீனா டாண்டன் என படத்தோடு ரசிகர்கள் ஒன்றிப்போக முடிகிறது.
இயக்குனர் பிரசாந்த் நீல் முதல் பாதம் முதல் பாதியை பில்டப் செய்யவே பயன்படுத்தினாலும் இரண்டாம் பாகத்தை கதையை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் மிரட்டுகிறார். ஒவ்வொரு காட்சியிலும் ராக்கிபாய்க்கு மாஸ் கொடுத்துள்ளார். சஞ்சய்தத்தை இன்னும் கொஞ்சம் அவர் பயன்படுத்தியிருக்கலாம். ஸ்ரீநிதிஷெட்டியின் ரொமான்ஸ் பகுதி இந்த பகுதியிலும் வேஸ்ட்.
முதல் பாகத்தில் பார்த்த அதே டார்க் கலர் இந்த படத்திலும் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் புவன் கெளடா அசத்தியுள்ளார். ரவி பஸ்ரூரின் இசை மற்றும் பின்னணி இசை வேற லெவல். மிகச்சரியா எடிட்டிங் என தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த படத்தின் ஒரே மைனஸ் என்று பார்த்தால் முதல் பாகத்தை பார்க்காதவர்களுக்கு இரண்டாம் பாகம் புரியாது என்பது மட்டுமே. மேலும் இரண்டாம் பாகத்தோடு படத்தோடு முடிவடையவில்லை என்பதும் கேஜிஎப் 3வது பாகம் வரும் என்றும் கிளைமாக்ஸில் கூறப்பட்டிருப்பது ரசிகர்களுக்கும் பெரும் ஆச்சர்யம். மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத மாஸ் ஆக்ஷன் படம் தான் ‘கே.ஜி.எஃப் 2’ என்பது குறிப்பிடத்தக்கது.