சினிமா
சுராஜ் இயக்கும் புதிய வெப் சீரியஸ்… மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் வடிவேலு….

தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் வடிவேலு என்பதும் அவர் நடிக்காத படங்களில் இல்லை என்ற அளவில் சில ஆண்டுகள் திரையுலகம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் வடிவேலு நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை இல்லை என்பதும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவருடைய வசனங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடர்பாக எழுந்த பிரச்சனையால் கடந்த 10 ஆண்டுகளாக அவர் திரையுலகில் தலைகாட்டாமல் உள்ளார். அவருக்கு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதால் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில், தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், கத்தி சண்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் ஒரு புதிய வெப் சீரியஸில் வடிவேலு நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரியஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.






















