தமிழ்நாடு
அறியாமையில் பேசும் கமலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: உதயநிதி ஆவேசம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அறியாமையில் பேசும் அவருக்கு பதிலடி விரைவில் கொடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபைக் கூட்டத்தை கூட்டாமல் நான் கிராமசபைக் கூட்டத்தை கூட்டத் தொடங்கியதும் என்னை பாா்த்து காப்பி அடிக்கின்றனா். திமுகவை நேரடியாகவே விமா்சனம் செய்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக என்ன செய்துவிட்டீா்கள் என்று கேள்வி எழுப்பி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அரசியல் மட்டுமே பேசுவதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கமலுக்கு பதில் அளித்துள்ளார். அதில், கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார். கிராமசபைக் கூட்டங்களை திமுக காப்பியடிக்கவில்லை. கமல்ஹாசனின் விமா்சனங்களுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தொிவித்துள்ளாா்.



















