செய்திகள்
தவெக மாவட்டச் செயலாளர் அந்தோணி சேவியர் மரணம் – விஜய் நேரில் அஞ்சலி செலுத்துகிறார்!
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
மறைந்த மாவட்டச் செயலாளர் அந்தோணி சேவியருக்கு விஜய் நேரில் அஞ்சலி
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றிய சாஜி (எ) B. அந்தோணி சேவியர் திடீரென மரணமடைந்த சம்பவம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் போது, நேற்று நள்ளிரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த தவெக தலைவர் விஜய், “திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்த அந்தோணி சேவியர் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. கட்சிக்காக அசைக்க முடியாத நம்பிக்கையுடன் செயல்பட்டவர். அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.
தவெக தலைவர் விஜய், மறைந்த அந்தோணி சேவியரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


