சினிமா செய்திகள்
திரிஷா – கவுதம் மேனன்: மீண்டும் இணையும் கூட்டணி!
What a fun morning????Can’t wait to show you guys what we filmed????????
— Trish (@trishtrashers) May 1, 2020
Thank you @menongautham pic.twitter.com/yt42CeI4nS
விண்ணைத்தாண்டி வருவாயா, என்ன அறிந்தால் திரைப்படங்களுக்கு மீண்டும் திரிஷா, கவுதம் மேனன் கூட்டணி இணைய உள்ளது.
2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடத்து இருந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அதன் பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் இரண்டு எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அது கைகூடவில்லை. பின்னர் திரிஷா கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.
அதன் பின்பு இருவர் கூட்டணியிலும் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகை திரிஷ டிவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் மொபைல் கேமராவை பயன்படுத்தி 4K, எச்டி தரத்தில் எப்படி படம் எடுப்பது கவுதம் மேனன் திரிஷாவுக்கு சொல்லிக்கொடுக்கிறார்.

அதன் மூலம், கொரோனா ஊரடங்கு காலத்திலும் இருவரும் மொபைல் கேமரா பயன்படுத்தி குறும்படம் எடுப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. குறும்படமா, வெப் சீரிஸா என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
அதுமட்டுமல்லாமல் ஊரடங்குக்கு கட்டுப்பாட்டுடன் மே 4-ம் தேதி நாளை திரிஷாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.
















