ஆன்மீகம்
18 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் திரிகிரக யோகம் – இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

ஜோதிடத்தின் படி கிரகங்களின் தலைவராகக் கருதப்படும் சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் நிழல் கிரகமான கேதும் சிம்ம ராசியில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து நுழைந்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி, புத்திசாலித்தனம், பேச்சு திறன், வியாபாரம், கல்வி ஆகியவற்றின் காரகராகிய புதனும் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால் சிம்ம ராசியில் சூரியன்–கேது–புதன் இணைந்து திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இது சக்திவாய்ந்த யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.
🔹 ரிஷபம்
ரிஷப ராசியின் 4ஆம் வீட்டில் இந்த திரிகிரக யோகம் நிகழ்வதால், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும். மன அழுத்தமும், தலைவலியும், தூக்கக் கோளாறுகளும் ஏற்படலாம். பண விஷயங்களில் கவனமாக முடிவெடுக்க வேண்டும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு வரக்கூடும்.
🔹 கன்னி
கன்னி ராசியின் 12ஆம் வீட்டில் இந்த யோகம் அமையுவதால், பணியிடத்தில் வேலைப்பளு திடீரென அதிகரிக்கும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் நல்லிணக்கத்தை பேண வேண்டும். கடின உழைப்பே வெற்றிக்குக் காரணமாகும். நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கும்.
🔹 மகரம்
மகர ராசியின் 8ஆம் வீட்டில் இந்த யோகம் அமைந்ததால், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உடல்நலத்தில் எலும்பு மற்றும் மூட்டு வலிகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. பொறுமையுடன் முடிவுகளை எடுப்பது அவசியம். இல்லாவிட்டால் இழப்புகள் அதிகரிக்கலாம்.




