Connect with us

தமிழ்நாடு

சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்!

Published

on

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் டுவிட்டர் பக்கத்தில் முழு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விபரங்கள் இதோ:

1. சென்னை மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் (sass) சென்னை பைபாஸ் சந்திப்பிலிருந்து (போரூர் ஏரி சிவன்கோயில் அருகில்) குமணன்சாவடி சந்திப்பு வரையிலான போக்குவரத்தில், இலகுரக வாகனங்கள் (கார், ஜீப், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்) செல்லவும் மற்றும் கனரக வாகனங்கள் (வேன்,டிரக், பால் மற்றும் வணிக
வாகனங்கள்) மாற்று வழியில் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்களுக்கு விலக்கு அளித்து அவ்வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

2. போரூரிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் (31, 55) பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள், கட்டாயமாக மேற்படி சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு – பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன்சாவடி, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, சவீதா பல்மருத்துவமனை சென்று இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படும்.

3. சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவிதா பல் மருத்துவமனை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவனை, ஏசிஏஸ் மருத்துவ கல்லூரி, வேலப்பன்சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடது புறம் திரும்பி சமயபுரம் வழியாக போருர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.

4. பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிக்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை காவல் துணை ஆணையாளர் ஆவடி போக்குவரத்து அவர்களின் இணையதள முகவரியான depavadi [email protected] மற்றும் கட்டுமான பணி அதிகாரியின் இணையதள முகவரியான sundramoorthypekecpg.com அனுப்பலாம்.

6. மேலும் பொதுமக்களது ஆலோசனைகளை ஆவடி காவல் ஆணையரகத்தின் டிவிட்டர் http://twitter.com/avndipolice மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஆவடி போக்குவரத்து

கைப்பேசி எண்.8056217958 மற்றும் காவல் ஆய்வாளர் டி15 எஸ். ஆர். எம்.சி போக்குவரத்து அவர்களின் கைப்பேசி எண் 9498141613 மற்றும் ஆவடி போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறை எண்.7305715666 க்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?