ஆரோக்கியம்
அதிக புரதச் சத்துள்ள டாப் 10 மீன்கள்!

அசைவ உணவில் குறிப்பாக மீன்களில் பல பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே அவற்றை நாம் உணவில் தவறாமல் எடுத்துக்கொள்ளும் போது பல்வேறு நன்மைகளை வழங்கும்.
அதிக புரதச்சத்து, சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியை மீன் உணவு வழங்கும். அப்படி நாம் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டாலும் அதிக புரதச் சத்துக்கள் உள்ள டாப் 10 மீன்கள் எவை என்ற பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சூரை மீன்
சூரை மீனின் அதிக புரதச் சத்து உள்ளன. 100 கிராம் சூரை மீன் சாப்பிட்டால் 30 கிராம் வரை புரதச் சத்து கிடைக்கும்.
- மீன் முட்டைகள்
மீன் முட்டையில் அதிக புரதச் சத்துள்ளது. 100 கிராம் மீன் முட்டையில் 29 கிராம் புரதச் சத்து கிடைக்கும்.

நெத்திலி மீன்
100 கிராம் நெத்திலி மீனில் 26 முதல் 29 கிராம் வரை புரதச் சத்து உள்ளன.

லாப்ஸ்டர்
100 கிராம் லாப்ஸ்டர் சாப்பிட்டால், 26.41 கிராம் வரை புரதச் சத்து கிடைக்கும்.

வாள்மீன்
100 கிராம் வாள்மீனில் 23 கிராம் புரதச் சத்து உள்ளது.

காலா மீன்
100 கிராம் காலா மீனில் 20 கிராம் புரதச் சத்து உள்ளது.

இறால்
100 கிராம் இறாலில் 20 கிராம் புரதச் சத்து உள்ளது.

ஹாலிபுட் மீன்
ஹாலிபுட் மீன் என அழைக்கப்படும் தட்டை மீனை 100 கிராம் சாப்பிட்டால் 19 கிராம் புரதச் சத்து கிடைக்கும்.

பண்ணா மீன்
100 கிராம் பண்ணா மீனில் 18 கிராம் புரதம் உள்ளது.

கொடுவா மீன்
100 கிராம் கொடுவா மீனில் 16-17 கிராம் புரதம் உள்ளது.