Connect with us

தினபலன்

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (14/12/2021)

Published

on

14-Dec-21 

செவ்வாய்கிழமை

மேஷம்:

இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல்  பணியாற்ற  வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு,  ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

ரிஷபம்:

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.  பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

மிதுனம்:

இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில்  செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது. வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.புதிய சொத்து வாங்கும் தருணமிது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

கடகம்:

இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுத்தம், சுகாதாரம் என்பதில் கவனமாக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சுப விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம்:

இன்று பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும்.  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

கன்னி:

இன்று எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

துலாம்:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.  

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்:

இன்று வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சிலர் மேலதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒன்று சேர்வர். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு:

இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்:

இன்று சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்வீர்கள். அதேநேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது.வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கும்பம்:

இன்று பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

மீனம்:

கிரகநிலை:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல்  பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தொழில்நுட்பம்2 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா2 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்2 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்3 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்1 நாள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா4 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Wieviel löffel kaffee pro tasse. Effektiv opgavestyring til rengørings virksomheder hele vejen rundt. İhtiyacınıza uygun forklift kiralama hizmetleri için bizimle iletişime geçebilir ve size en uygun çözümleri keşfedebilirsiniz.