Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/10/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

02-10-2020 

வெள்ளிக்கிழமை

மேஷம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் –  தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ –  பாக்கிய ஸ்தானத்தில்   கேது, சனி –  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) – அயன, சயன, போக ஸ்தானத்தில்   புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்:

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் – குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ –   அஷ்டம ஸ்தானத்தில்  கேது, சனி  – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா)  – லாப ஸ்தானத்தில்  புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.    

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில்  சந்திரன், ராஹூ –  களத்திர ஸ்தானத்தில்    கேது, சனி – அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  தொழில் ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன்  – அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்   கேது, சனி –  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  –  பாக்கிய ஸ்தானத்தில்  புதன், சூர்யன் –  லாப ஸ்தானத்தில்  சுக்ரன் –  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்    கேது, சனி –  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  அஷ்டம ஸ்தானத்தில்   புதன், சூர்யன் – தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  –  லாப ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

கன்னி:

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்    கேது, சனி – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா)  –  களத்திர ஸ்தானத்தில்   புதன், சூர்யன் –   பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன் –  தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

துலாம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  கேது, சனி – சுக  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  ரண, ருண ஸ்தானத்தில்   புதன், சூர்யன் –  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்,  சுக்ரன் –  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 2, 5

விருச்சிகம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  கேது, சனி  –   தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – பஞ்சம ஸ்தானத்தில்   புதன், சூர்யன் –  களத்திர ஸ்தானத்தில்   சுக்ரன் –  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று கவனமுடன் செயல்படவேண்டிய நாள். தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு:

கிரகநிலை:

ராசியில்  கேது, சனி – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  சுக  ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மகரம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  தைரிய ஸ்தானத்தில்   புதன்,  சூர்யன் – பஞ்சம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  ரண, ருண  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ –  அயன, சயன,  போக ஸ்தானத்தில்   கேது, சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். தைரியமாகச் செயல்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்   புதன்,  சூர்யன்  – சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ  –  லாப ஸ்தானத்தில்  கேது, சனி – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மீனம்:

கிரகநிலை:

ராசியில்  புதன்,  சூர்யன் –  தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் –  சுக ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ –  தொழில்  ஸ்தானத்தில்   கேது, சனி – லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று காலை 8.44 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..