Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/10/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

01-10-2020 

வியாழக்கிழமை

மேஷம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் –  தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ –  பாக்கிய ஸ்தானத்தில்  கேது, சனி –  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) – லாப ஸ்தானத்தில்  புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்:

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் – குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ –   அஷ்டம ஸ்தானத்தில்  கேது, சனி  – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) –  தொழில் ஸ்தானத்தில்  புதன்  – லாப ஸ்தானத்தில் சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில்  சந்திரன், ராஹூ –  களத்திர ஸ்தானத்தில்   கேது, சனி – அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – பாக்கிய ஸ்தானத்தில்  புதன் –  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்  – அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்:

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  கேது, சனி –  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  – அஷ்டம ஸ்தானத்தில்  புதன்  –  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் –  லாப ஸ்தானத்தில்  சுக்ரன் –  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சிம்மம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்   கேது, சனி –  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) – களத்திர ஸ்தானத்தில்  புதன் –  அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் – தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  –  லாப ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், இறுதியில் நல்லதே நடக்கும். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கன்னி:

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்   கேது, சனி – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா)  – ரண, ருண ஸ்தானத்தில் புதன்  –  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன் –   பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன் –  தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன், ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

துலாம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  கேது, சனி – சுக  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – பஞ்சம ஸ்தானத்தில்  புதன்  –  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன் –  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்,  சுக்ரன் –  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  கேது, சனி  –   தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  சுக  ஸ்தானத்தில்  புதன் – பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் –  களத்திர ஸ்தானத்தில்   சுக்ரன் –  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

தனுசு:

கிரகநிலை:

ராசியில்    கேது, சனி – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) – தைரிய ஸ்தானத்தில்  புதன் –   சுக  ஸ்தானத்தில்  சூர்யன் –  ரண, ருண  ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1,2

மகரம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு (அதி. சா) – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன் –  தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் – பஞ்சம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  ரண, ருண  ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ –  அயன, சயன,  போக ஸ்தானத்தில்  கேது, சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்:

கிரகநிலை:

ராசியில் புதன் –  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்  – சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ  –  லாப ஸ்தானத்தில்  கேது, சனி – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று  கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம்:

கிரகநிலை:

ராசியில்  சூர்யன் –  தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் –  சுக ஸ்தானத்தில்  சந்திரன்,  ராஹூ –  தொழில்  ஸ்தானத்தில்   கேது, சனி – லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – அயன, சயன,  போக ஸ்தானத்தில்  புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

 

இன்று இரவு 10.04 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

 

பலன்:

இன்று உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா19 மணி நேரங்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.01.2026

இந்தியா1 நாள் ago

தேவதைகளின் இறக்கைகளுக்கு சக்தி கொடுக்கும் கனரா வங்கி – மகளிருக்கு 3 முத்தான சேமிப்புக் கணக்கு திட்டங்கள்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 12.01.2026

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் | 12 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழ் கொடுக்கலாம்: சீமான் கருத்து

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொங்கல் 2026: இந்த ஆண்டு தை பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் இதோ!

வணிகம்7 நாட்கள் ago

சென்னையில் முட்டை விலை 20 காசுகள் குறைவு: புதிய விலை அறிவிப்பு

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்க டிமொனிடைஸேஷன் வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் செய்யும் புதிய தணிக்கை குழு.. எப்போது தெரியுமா?

சினிமா6 நாட்கள் ago

Bigg Boss Tamil 9: ஒரே நேரத்தில் இரு ரெட் கார்டு – பார்வதி, கம்ருதீனுக்கு சம்பளம் கிடையாதா? உண்மை என்ன?

இந்தியா7 நாட்கள் ago

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு: யார் அளவுக்கு அதிகமாக கடன் பெறுகிறார்கள்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் சென்சார் சான்றிதழ்கள் என்னென்ன? முழு விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்கம் டிமொனிடைஸேஷன் நடந்தால் என்ன நடக்கும்?

தமிழ்நாடு7 நாட்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

Translate »