வணிகம்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில் தொழில்துறையில் வளர்ச்சி அடையாது மாவட்டங்களில், புதிய சிப்காட்கள் மற்றும் தொழில் பூங்காக்களை அமைக்கவும், ஏற்கனவே உள்ள சிப்காட்களின் பரப்பை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, காஞ்சிபுரம், நாகபட்டினம், தேனி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உட்பட 11 மாவட்டங்களில் 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட்களை விரிவாக்கம் செய்ய உள்ளனர்.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த முடிவால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சமீபத்தில் ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் எங்கும் இல்லாத விதமாக 15.7 சதவிகிதம் என 38,837 தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு அண்மையில் தொழில் நிறுவனங்களுடன் போட்ட ஒப்பந்தங்களின் படி வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.