தமிழ்நாடு
தனியார் மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் நிலை என்னவென்று தெரியாமலே இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள 25 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும்.
மேலும் கொரோனா வைரஸ் வார்டில் வேறு எந்த ஒரு நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கக் கூடாது அளவுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
அரசு வெளியிடும் உத்தரவுகளைத் தனியார் மருத்துவமனைகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.














