தமிழ்நாடு
நளினிக்கு ஒரு மாதம் பரோல்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாத பரோலில் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஏழு தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பேரறிவாளன் அவ்வப்போது பரோலில் வெளியே வந்திருக்கிறார் என்பதும் தற்போது கூட அவர் பரோலில்தான் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏழு பேர்களில் ஒருவராகிய நளினிக்கு தற்போது பரோல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட தன்னை கவனித்துக் கொள்வதற்காக நளினிக்கு பரோல் வழங்க கோரி அவரது தாயார் பத்மா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த பரோல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.














