தமிழ்நாடு
என்னால் தூக்கமின்றி தவிக்கின்றார் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை இரவு ஏழு மணி உடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீலகிரியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதல்வர் கனவு காணுகிறார் என்றும் என்னைப் பற்றியே சதா சிந்திப்பதால் தூக்கம் இழந்து தவிக்கிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் ஸ்டாலின் இன்னும் எத்தனை அவதாரம் எடுத்தாலும் நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் திமுக ஜெயிப்போம் என்று கூறிவருகிறார். எத்தனை அவதாரம் எடுத்தாலும் அது நடக்கவே நடக்காது.
நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானாலும் என்னை நீங்கள் வந்து பார்க்கலாம். ஆனால் ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட உங்களால் தொட முடியாது என்று முதல்வர் பழனிசாமி கூறினார். முதல்வரின் இந்த பிரச்சாரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





















