Connect with us

இந்தியா

அடுத்த 6 மாதத்தில் 1000 கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

Published

on

அசாமில் குறைந்த வயதில் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது அதிகமாக உள்ளதைக் குறைக்க, அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி, அசாமில் குறைந்த வயதுடைய பெண்களைத் திருமணம் செய்துகொண்ட ஆண்கள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான போக்சோவின் கீழ் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#image_title

14 வயதுக்கும் குறைந்துள்ள பெண்களுடன் உறவுகொள்வது அவர் கணவராக இருப்பினும் அது குற்றம். பெண்களுக்கான அதிகாரப்பூர்வ திருமண வயது 18 ஆக இருந்த போதும் அசாமில் பலர் குறைந்த வயதுடைய பெண்களைத் திருமணம் செய்துள்ளார்கள்.

அவர்களைச் சட்ட ரீதியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்கள் 22 முதல் 30 வயதுக்குள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே மகப்பேறுவுக்கான சரியான காலம். குறைந்த வயதில் பெண்கள் மகப்பேறுவை சந்திக்கக் கூடாது. அதே நேரம் நீண்ட காலமும் தள்ளிப்போடக் கூடாது. கடவுள் நமது உடலை எல்லாவற்றிற்கும் பொருத்தமான வயது இருக்கும் வகையில் படைத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

அசாம் அரசு எடுக்கும் இந்த முடிவால் அங்கு அதிகளவில் ஏற்பட்டு வரும் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் கட்டுக்குள் அவரும். அதற்குப் பெண்களின் திருமண வயதும் முக்கிய காரணமாக உள்ளது. அசாமில் சராசரியாக 31 சதவீத திருமணங்கள் தடைசெய்யப்பட்ட வயதில் நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?