தமிழ்நாடு
தடுப்பூசி போட்டதால் விவேக் மரணமா? அரசு தெளிவுபடுத்த வேண்டும்: திருமாவளவன்

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிலையில் நேற்று அவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அவர் உயிரிழந்ததை அடுத்து அவருடைய உயிரிழப்பிற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? என்ற கேள்வியை ஒருசிலர் எழுப்பி வருகின்றனர்
ஆனால் மருத்துவர்கள் மிகவும் தெளிவாக தடுப்பூசி போட்டதற்கும் மாரடைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விவேக் மரணம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே #அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி.
#நடிகர்_விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவருடைய மறைவு
பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது.தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே #அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அவருக்கு எமது அஞ்சலி. pic.twitter.com/SswDq6L5ix— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 17, 2021
























