இந்தியா
சிறுத்தையை ஓடவிட்ட சிங்கப்பெண்: வயதான மூதாட்டிக்கு குவியும் பாராட்டுக்கள்!

தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை தனது கைத்தடியால் அடித்து ஓடவிட்ட வயதான மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருவதையடுத்து அந்த மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அருகே உள்ள கோரேகான் என்ற பகுதியில் குடியிருப்புக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. இந்த நிலையில் வயதான பெண் ஒருவர் வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்த நிலையில் அந்த பெண்ணை திடீரென அந்த சிறுத்தை தாக்கியது.
இதனை அடுத்து அந்தப் பெண் தைரியமாக தன் கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை வைத்து அந்த சிறுத்தை அடித்து தப்பித்தார். இதனையடுத்து அந்த சிறுத்தை ஓடிவிட்டது. அந்த மூதாட்டி சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தார் என்பதும் தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பழங்கால தமிழ் பெண்கள் புலியை முறத்தால் அடித்து ஓட விட்டார்கள் என்று கதைகளில் நாம் படித்து இருக்கின்றோம். அந்த வகையில் தற்போது ஒரு சிறுத்தையை வயதான மூதாட்டி ஒருவர் அடித்து விரட்டி உள்ள சம்பவத்தின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே சிறுத்தை ஒரு குழந்தையை தூக்கி செல்ல முயன்றபோது அருகிலிருந்தவர்கள் அந்த சிறுத்தையை விரட்டி குழந்தையை காப்பாற்றினார்கள் என்று கூறப்படுகிறது.
