Connect with us

இந்தியா

டிஜேவின் அதிக சத்தத்துடன் கூடிய இசை.. மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகன்..!

Published

on

திருமணத்தில் டிஜேவின் அதிக சத்தத்துடன் கூடிய இசை காரணமாக மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பீகார் மாநிலத்தில் உள்ள சீதா மர்கி என்ற மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமகன் சுரேந்திர குமார் திருமணத்திற்கு தயாராகி மணமேடையில் உட்கார்ந்து இருந்தார்.

இந்த நிலையில் திருமண விழாவில் டிஜேவின் இசை இசைக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் டிஜேயின் இசை அதிக சத்தத்தில் இருந்ததை அடுத்து சுரேந்திர குமார் அதை அசெளகரியமாக உணர்ந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் டிஜே இசை குறித்து புகார் அளித்ததாகவும் சத்தத்தை குறைக்கும் படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

ஆனால் டிஜே குழுவினர் சத்தத்தை குறைக்காமல் தொடர்ந்து அதிக சத்தத்துடன் இசைத்ததை அடுத்து திடீரென மணமகன் சுரேந்திர குமார் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனை அடுத்து மணமகன் சுரேந்திர குமார் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும்போது வழியில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திருமண விழாவில் ஒரு குறிப்பிட்ட டெசிமலில் தான் இசை இசைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் அதிக சத்தமுடைய டிஜே இசையால் மணமகனின் தந்தை இறந்தார் என்பதும் 65 வயதான அந்த நபரின் பரிதாப முடிவு திருமண வீட்டாரை கதிகலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குஜராத்தில் உள்ள ஒரு மணமகள் டிஜே இசை காரணமாக மாரடைப்பால் உயிரிழந்தார் என்றும் இதனை அடுத்து அந்த இறந்த மணமகளின் தங்கைக்கு அதே மேடையில் அதே மணமகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா19 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்19 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா20 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
專業 電腦保養 服務供應商,無限上門it支援服務 | tech computer.