சினிமா
காஷ்மீரில் லெஜண்ட் அண்ணாச்சி! லியோ படத்தில் சீக்ரெட்டாக இணைந்து விட்டாரா?

தி லெஜண்ட் படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் தற்போது காஷ்மீரில் சுற்றுலா செய்து வரும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.
ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளுடன் விளம்பரப்படத்தில் நடித்த லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா உள்ளிட்ட கோலிவுட் நடிகைகள் பல கோடி சம்பளம் பேசியும் மறுத்து விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டன.

#image_title
கடைசியில் பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலாவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து தி லெஜண்ட் படத்தில் அண்ணாச்சி நடிக்க வைத்தார் என கூறப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்தபடியே தி லெஜண்ட் படம் படு தோல்வியை சந்தித்தது. ஆனாலும், சினிமாவில் நடிப்பதை விட மாட்டேன் என்றும் அடுத்து காதல் படத்தில் நடிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார் அண்ணாச்சி.

#image_title
இந்நிலையில், திடீரென தனது விடுமுறையை கொண்டாட காஷ்மீருக்கு பறந்துள்ள லெஜண்ட் சரவணன் அங்கே எடுத்துக் கொண்ட வீடியோக்களையும், புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
அண்ணாச்சி காஷ்மீருக்கு சென்ற தகவல் தெரிந்த நிலையில், ரசிகர்கள் அண்ணாச்சியும் தளபதி விஜய்யின் லியோ படத்தில் ஒரு ஏஜென்ட்டாக நடிக்கிறாரா என்றும் லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் இணைந்து விட்டாரா என்றும் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.