சினிமா செய்திகள்
மால் செட் பின்னணி, 5 மொழி போஸ்டர்: விஜய் ரசிகர்களுக்கு ‘பீஸ்ட்’ விருந்து!

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் ஐந்து மொழி போஸ்டர்கள் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
மேலும் இந்த போஸ்டரின் பின்னணியில் மால் செட் மற்றும் ராணுவ வீரர்கள் இருப்பது போன்ற புகைப்படம் மிகப்பெரிய அளவில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர்.




















